மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 18 அக்டோபர், 2014
இணையம் வழியாக குடும்ப பெண்களும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தலாம்
புதன், 30 ஜூலை, 2014
30
TECHNICAL ANALYSIS இல் பார்க்க வேண்டிய விசயங்களில் அநேகம் உண்டு, இருந்தாலும் தடை இன்றி வர்த்தகம் செய்வதற்கும், புதிதாக ஒரு பங்கை தேர்ந்தேடுப்பதற்க்கும்,
அந்த பங்கின் இலக்கு என்ன என்பதை காண்பதற்க்கும், தொடர்ந்து சக்தியுடன் ஏறுமா, இல்லை இறக்கம் இருக்குமா, என்பதை கண்டு வர்த்தகம் செய்து நிறைவாக இருப்பதற்கும் நாம் இது வரை பார்த்து வந்த விஷயங்கள் போதுமானதாக இருக்கும்,
இருந்தாலும் உங்களுக்கு பயிற்சி ஏற்பட ஏற்பட மேலும் புதிய விசயங்களை நீங்கள் தேட ஆரம்பிப்பீர்கள், அப்பொழுது உங்களின் தேடல் அநேக பலன்களை தரும், நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம், மேசையை விட்டு நகராமலே உலகில் இருக்கும் அனைத்து விசயங்களையும் வலை தளங்களின் மூலம் எடுத்து விடலாம்,
சரி நாம் பயின்ற மேற்கண்ட அனைத்து பாகங்களில் இருந்தும் முக்கியமான விசயங்களை எப்படி எல்லாம் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பதினையும், அனைத்து விசயங்களையும் தொகுப்பாக ஒரு பங்கினை தேர்ந்தெடுக்க எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதினையும் பார்ப்போம், அப்பொழுது தான் இந்த செயல் முழுமை பெரும்,
பொதுவாக ஒரு பங்கினை பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்ள கண்டிப்பாக ஏதாவது ஒரு கண்ணுக்கு தெரிந்த வடிவம் வேண்டும், அந்த வடிவம் வரைபடங்களே, ஆகவே CHART எனப்படும் வரைபடங்கள் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது, அதிகமான நபர்கள் வலை தளங்களில் EOD DATA கொடுக்கின்றார்கள், இதற்காக செலவு செய்வது ஞாயமான செயல் தான், நாம் தங்குவதற்கு வீடு கட்டுவதை யாரும் செலவு என்று எண்ணுவோமா, ஆகவே இந்த CHART DATA வாங்குவது அதி முக்கியம், இலவசமாக கூட கிடைக்கலாம் அதை வலை தளங்களில் தேடுங்கள், அடுத்து
பொதுவாக நாம் ஒரு பங்கினை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம்
அதாவது நாம் வர்த்தக பயணம் மேற்கொள்ள வர்த்தகம் செய்யும் போது ஒன்று பங்குகளை வாங்கி லாபத்தில் விற்ப்போம், அல்லது விற்று பிறகு லாபத்தில் வாங்குவோம், இது முழுமையாக தின வர்தகத்திற்க்காகவும், FUTURE CONTRACT எனப்படும் F&O என்ற வர்தகத்திர்க்காகவும் பயன்படுத்துவோம்,
அதே நேரம் DELIVERY எனப்படும் முறையில் பங்குகளை வாங்கி சிறிது நாட்கள் கழித்து நாம் எதிர்பார்த்த இலக்குகள் வந்தவுடன் நமது கை இருப்புகளை லாபத்தில் விற்ப்போம், இதற்க்கு POSITIONAL TRADE, SWING TRADE, SHORT TERM TRADE, LONG TERM TRADE என்று நாம் பங்குகளை வைத்து இருக்கும் நாட்களின் அடிப்படையில் பெயர் வைத்துக்கொள்ளலாம், ஆனால் இங்கு அனைவரின் நோக்கமும் லாபம் மட்டுமே,
இது போன்ற அனைத்து விதமான வர்த்தகங்களுக்கும் லாப சூட்சுமங்கள் நாம் பங்குகளை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது, பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகளின் நகர்வுகளை பொறுத்து மேலே சொன்ன என்ன விதமான வர்த்தகங்களில் நாம் ஈடுபடப்போகிறோம் என்பது வெளிச்சத்திற்கு வரும், நாம் தினவர்த்தகம் செய்தாலும், அல்லது நீண்ட நாட்களுக்கு உரிய வர்த்தகம் செய்தாலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று அநேகம் உள்ளன அவைகளை பற்றி தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்,
பங்குசந்தைகளில் வர்த்தகம் செய்வது என்பது ஒரு பேரூர்ந்தில் பயணம் செய்வதற்கு சமம், பொதுவாக நாம் திருச்சியில் இருந்து ஒரு 30 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்க்கு உரிய TOWN BUS இல் செல்வோம் இல்லையா, இது தான் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் பேரூர்ந்தை தேர்ந்து எடுப்பது தான் நமது பயணத்தின் ஆடி அந்தமே உள்ளது,
எப்படி நமக்கான பேரூர்ந்தை தேர்ந்தெடுப்பது அவசியமோ, அதே போல் நாம் வர்த்தகம் செய்வதற்கு சரியான பங்கை தேர்ந்தெடுப்பதும் அவசியம், எண்ணி பாருங்கள் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாத பேரூர்ந்தில் ஏறினால் என்ன ஆகும், நமது பயணம் கேள்விக்குறியாகும்! என்ன காரியத்திற்காக நாம் இந்த பயனத்தை ஆரம்பித்தோமோ அந்த விஷயம் தடைபடும், முழுவதும் வீணாகி நமக்கு Tension வருவது தான் மிஞ்சும்,
இதே போல் தான் தவறான பங்குகளை நாம் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்தால் என்ன ஆகும், ஆகவே இந்த முக்கியமான சூட்சுமங்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டால் தான் நமக்கு வெற்றி என்பது சாத்தியமாகும், சரி இன்னும் விரிவாக பார்ப்போம்
முதலில் பங்குகளின் நகர்வுகள் எப்பொழுதும் ஒரு வடிவத்தின் வழியாக கிடைக்கும் Break out எனப்படும் செயல் நடப்பதினால் தான் நடந்தேறும், இதன் மூலமே அந்த பங்கு சென்றடைய வேண்டிய இலக்குகள் என்ன என்பதினை நாம் அறியலாம். ஆகவே நாம் நமது வர்த்தகத்திற்கு தேவையான பங்குகளை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வடிவங்களை தான் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நன்றாக நகரக்கூடிய பங்குகள் எது என்பதை நாம் அடையாள காணலாம்,
இவ்வாறு வடிவங்களை அடையாளம் காண நாம் நமது Charting s/w ஐ பயன்படுத்தி வருசயாக பங்குகளை பார்த்துக்கொண்டே வர வேண்டும், எந்த பங்கில் என்ன விதமான வடிவங்கள் உள்ளது என்பதினை அடையாளம் கண்டு, அந்த பங்கு எப்பொழுது Break out என்ற நிலையை அடையும், அதற்க்கு உண்டான Break out point என்ன என்பதினை கண்டு பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்,
பிறகு இவ்வாறு break out என்ற நிலையினை அடைந்த பின்பு தொடர்ந்து ஏறுவதற்கு உரிய சக்திகள் இந்த பங்கில் உள்ளதா, என்பதினை நாம் முன்னர் பார்த்த Indicator களை பயன்படுத்தி தெளிவு பெறவேண்டும், அதில் சாதகமான விஷயம் கிடைத்த பிறகு, அந்த பங்கிற்கு ஏதும் சாதகமான அல்லது பாதகமான செய்திகள் உள்ளதா என்பதினை வலை தளங்களில் தெரிந்து கொள்வதும் நல்லது,
மேலும் தொடர்ந்து அந்த பங்கில் volume எவ்வாறு நடந்து வருகிறது என்பதினை உற்று நோக்க வேண்டும், volume மிக அதிகமாக நடந்து கொண்டே இருந்தால் அதன் பலம் அதிகம், இந்த volume ஐ நாம் கண்காணிப்பதன் மூலம் அநேக நன்மைகளை அறியலாம், இது அணைத்து indicator களையும் விட தலை சிறந்தது, அடுத்து இந்த volume நல்ல நிலையில் இருந்து, indicator கள் எல்லாம் சாதகமாக இருந்து, break out என்ற நிலையினையும் எட்டி விட்டால்,
சந்தேகமே வேண்டாம் அன்றே ஒரு மிகப்பெரிய உயர்வை இந்த பங்கு கொடுக்கும், மேலும் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வடிவத்தின் இலக்குகளை அடைய பயணிக்க ஆரம்பிக்கும், இவ்வாறுதான் நாம் பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும், அவ்வாறு தேர்ந்தெடுத்த பங்கின் வகையில் உள்ள மற்றைய (same sector scripts) பங்குகளின் நிலை என்ன என்பதினையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்,
அடுத்து நமது வர்த்தகம் எந்த வகையை சேர்ந்தது என்பதினையும் முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும், அதாவது நீங்கள் தின வர்த்தகராக இருந்தால் இது போன்ற break out பெற்ற பங்குகளை வர்த்தகம் செய்து குறிகிய லாபத்துடன் வெளியேறுதல் வேண்டும், அதாவது உங்களுக்கு ஒரு நாளைக்கு எவளவு லாபம் ஈட்ட வேண்டும் என்று எண்ணம் இருக்கின்றதோ அதற்க்கு தகுந்தார்ப்போல் வர்த்தகம் செய்ய வேண்டும்,
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் திருச்சிக்கு அடுத்து ஒரு 30 கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு செல்ல அதற்க்கு உரிய Town Bus ல் செல்லலாம், அதே நேரம் சென்னை செல்லும் விரைவு பேரூர்ந்திலும் செல்லலாம், சென்னை Bus இல் சென்றால் விரைவாக செல்ல முடியும், எந்த தங்கு தடையும் இருக்காது,
அதே நேரம் Town Bus இல் சென்றால் நீங்களே யோசித்து பாருங்கள், town bus இல் செல்வது என்பது வெறும் Intra day chart ஐ மட்டும் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது போல, அதே நேரம் EOD chart ஐ பயன்படுத்துவது சென்னை bus இல் செல்வது போல, எதில் அதிக வசதி இருக்கும்,
ஆனால் இந்த சென்னை Bus இல் சென்றால் Ticket இன் விலை அதிகமாக தான் இருக்கும், அது போல EOD CHART இல் பங்குகளை கண்டறிவது கொஞ்சம் உழைத்தால் தான் கிடைக்கும், நீங்கள் home work செய்ய தயாரானால் பின்பு சென்னை Bus இல் வர்த்தகம் செய்யலாம், நீங்களே முடிவு செய்யுங்கள், நெரிசலில் சிக்கி நின்று! நின்று செல்லும் town bus வர்த்தகம் வேண்டுமா, அல்லது அனைவருக்கும் இடம் கிடைத்து மிக விரைவாக செல்லும் சென்னை bus வர்த்தகம் வேண்டுமா, அடுத்து
நீங்கள் வாங்கி வைத்து லாபம் பார்க்கும் வர்த்தகம் செய்தால் (DELIVERY) அந்த பங்கின் இலக்குகள் அடையும் வரை பொறுத்து இருந்து இலக்குகள் வந்த வுடனோ அல்லது அதன் அருகில் வந்தவுடனோ உங்கள் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அடுத்து எந்த பங்கில் வர்த்தகம் செய்யலாம் என்பதினையும் முடிவு செய்து இந்த பங்கில் இருந்து வெளியேறுங்கள்,
அதோடு தற்பொழுதைய சந்தைகளின் நிலை என்ன ஏதும் தடைகளில் உள்ளதா, அல்லது தொடர்ந்து ஏறுமா என்பதினையும் கவனிக்க வேண்டியது முக்கியம், இவ்வாறெல்லாம் நீங்கள் யோசித்து ஒரு பங்கை தேர்ந்தெடுத்தால் நட்டங்கள் என்பது நமக்கு நேராது,
அடுத்து தின வர்த்தகத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்று கொஞ்சம் பார்த்து விடுவோம்:
பொதுவாக எந்த ஒரு செயலுக்கும் முன்னேற்ப்பாடு என்பது முக்கியம், அடுத்து இயற்கையாகவே நமக்கு இந்த முன்னேற்ப்பாடு செய்யும் பழக்கம் உள்ளது, காலையில் எழுவதில் இருந்து இரவு உறங்கும் வரை நாம் செயயும் ஒவ்வொரு செயலுக்கும் சில முன்னேற்ப்பாடுகளை செய்வோம், இன்னும் சொல்ல வேண்டுமானால் தூங்குவதற்கு முன் BED SPREAD விரிப்பது, போர்வைகளை சரி படுத்திக்கொள்வது, A.C போட்டு கொள்வது, என்று நிம்மதியான உறக்கத்திற்கு முன்னேற்ப்பாடு செய்கிறோம் இல்லையா,
அது மாதிரி தான்! ஆனால் இந்த பங்கு வர்த்தகத்திற்கு மட்டும் பெருவாரியான வர்த்தகர்கள் தயாராவதே இல்லை, அது ரொம்ப முக்கியம், ஒன்றுமே தெரியாத வர்த்தகர்கள் கூட சில அடிப்படை தகவல்களை சேர்த்து கொண்டு தான் தின வர்த்தகத்திற்கு செல்ல வேண்டும் அது மாதிரியான விசயங்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்
முதலில் அன்றன்றைய தின நகர்வுகளை முடிவு செய்வது நமது NIFTY மற்றும் SENSEX ஆகிய குறியீடுகளின் அன்றன்றைய SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகள் தான், இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளும் நம்மை வெகுவாக பாதிக்கும், இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நாம் பயணம் செய்யும் வழியில் ஏதாவது ஒரு அசம்பாவீதம் நடந்து இருந்தால் நமது பயணமும் அங்கு சற்று தடைபடும் இல்லையா! அதே போன்றுதான்,
ஆகவே செல்லும் வழி எவ்வாறு உள்ளது என்பதினை தெளிவாக தெரிந்து கொள்ள நாம் உலக சந்தைகளின் நிலைகளை தெரிந்து கொள்வது அவசியம் அந்த வகையில் சில முக்கியமான விசயத்தி பற்றி பார்ப்போம்,
இந்த பங்கு சந்தைகளுக்கு எல்லாம் அண்ணனாக விளங்கும் அமெரிக்க சந்தைகள் அனைவருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக விளங்குகிறது, ஏனெனில் மிக பழமையான பங்கு சந்தை வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த அமெரிக்க சந்தைகள், அந்த வகையில் அமெரிக்க சந்திகளின் நிலை என்ன, அவைகளின் முதல் நாள் முடிவு எப்படி உள்ளது என்பதினை நாம் பார்க்க வேண்டும்,
அதன் படி அவர்கள் உயரத்தில் முடிந்து இருந்தாலும் அல்லது வீழ்ச்சி அடைந்து இருந்தாலும், அவர்களின் வரைபடங்களை வைத்து இந்த வீழ்ச்சி அல்லது உயர்வு தொடர்ந்து என்ன மாதிரியான செயல்பாட்டை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதினை கவனிக்க வேண்டும், ஏனெனில் முதல் நாள் உயர்வில் முடிந்து இருந்தாலும் TECHNICAL CHART இன் படி அது சரியான தடை புள்ளியாக இருந்தால் தொடர்ந்து சரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்,
அதே போல் வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அது சரியான SUPPORT புள்ளியாக இருக்கலாம், ஆகவே அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதினை அவர்களின் TECHNICAL CHART இன் துணை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும், பிறகு அமெரிக்க சந்தைகளின் 24 மணி நேர வர்த்தகமான FUTURE சந்தைகள் நமது கணிப்பின் படி செயல்படுகிறதா என்பதினையும் கவனிக்க வேண்டும்,
பிறகு இதன் வெளிப்பாடு ஆசிய சந்தைகளில் எப்படி எதிரொலிக்கிறது என்பதினையும் பார்த்து கொள்ளவேண்டும், இங்கு எப்படி செயல்பாடு இருக்கின்றதோ! அதே நிலை நமது சந்தைகளுக்கும் ஏற்படலாம், அடுத்து நாமது XEROX COPY யான SINGAPORE NIFTY யின் நிலை என்ன என்பதினை பார்த்து, நமது சந்தை இன்று இப்படி தான் செயல்படும் என்ற ஒரு முடிவுக்கு வரலாம்,
இது ஒரு 60% அனுமானமே, அடுத்து நமது சந்தை தொடங்கியவுடன் நமது அனுமானம் சரியாக உள்ளதா என்பதினை பார்த்து, சரியாக இருந்தால் தொடர்ந்து நமது வர்த்தக நிலைகளை எடுக்கலாம், அதே நேரம் அதற்க்கு எதிர்பதமாக இருந்தால், சற்று பொறுமையுடன் இருந்து சரியான பாதை என்ன என்பதினை தெளிவு படுத்திய பிறகு வர்த்தகம் செய்யலாம், இறுதி வரை சந்தையின் கோணம் தெளிவாக நமக்கு புடி படவில்லை என்றால் வர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது,
அடுத்து நீங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் பங்குகளை சற்று கவனித்து, நீங்கள் வர்த்தகத்திற்காக எடுத்து இருக்கும் BUY ABOVE மற்றும் SELL BELOW புள்ளிகளை அந்த பங்கு எவ்வாறு கையாளுகிறது என்பதினை ஆய்ந்து வர்த்தகத்தை தொடங்கலாம்,
அதோடு மிக முக்கியமாக சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக RELIANCE INDUSTRIES என்ற பங்கு இருப்பதால், உங்களின் ஒவ்வொரு வர்த்தகத்தின் பொழுதும் RIL பங்குகளின் நிலை என்ன, அதாவது தொடர்ந்து உயரும் வாய்ப்புகளில் உள்ளதா அல்லது தொடர்ந்து இறங்கும் நிலையில் உள்ளதா என்பதினை தெரிந்து கொண்ட பின்பு தான் வர்த்தகம் செய்ய வேண்டும்,
ஏனெனில் RIL பங்குகள் தன்னிச்சையாக நின்று சந்தையின் போக்குகளையே மாற்றி விடும் சக்தியை பெற்றது என்பது நாம் அறிந்ததே, அதே போல் இதனுடன் NIFTY யின் நிலையையும் கணித்து கொண்டே இருக்க வேண்டும், இந்த இரண்டு விசயங்களும் உங்களின் வர்த்தக பாதைகளிலே இருந்தால் உங்களுக்கு வெற்றி தான், இதே போல் தான் நீங்கள் தின் வர்த்தகத்திற்கு தயாராக வேண்டும், இப்படியே தொடர்ந்து செய்து வாருங்கள் தொடக்கத்தில் சற்று சிரமங்கள் இருக்கலாம், போக போக சந்தையின் போக்குகள் எளிதாக் உங்கள் கைகளில் வந்து விடும், வாழ்த்துகள்
கடந்த 30 வாரங்களாக நாம் பார்த்து வந்த பயில்வோம் பங்கு சந்தை இனிதே முடிவடைகிறது, இந்த செயல்பாட்டிற்க்காக எனக்கு உருதுணையாக இருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

செவ்வாய், 29 ஜூலை, 2014
29
கடந்த வாரம் ROUNDING BOTTOM என்பது எவ்வாறு நடை பெரும் என்பதினை பற்றி பார்த்தோம்,
இந்த ROUNDING BOTTOM என்ற நிகழ்வுகளில் நாம் தேர்வு செய்யும் பங்குகளின் நிலைகளை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவது நன்றாக இருக்கும், அதாவது இந்த ROUNDING BOTTOM BUYING என்பது ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு பிறகு ஒரு புதிதாக பிறந்தது மறுபடியும் வளர்ந்து பெரிய ஆளாக வேண்டிய நிலையில் இருக்கும் பங்குகளை வாங்குவது ஆகும்,
அதாவது ஒரு மிகப்பெரிய வீரர் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டு தனது பலத்தை முழுவதும் இழப்பதற்கு சமம் ஆகும், மிக பலமான சிகிச்சைக்கு பின்பு அவர் முன்பு போல தனது பலத்தை அடைவாரா! மேலும் முன்னர் அவர் போர்க்களத்தில் செய்த சாகசங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதிய சாகசங்களை செய்வாரா என்று தெரிந்த பின்பு தான் அவரை மறுபடியும் போற்படையில் சேர்ப்பார்கள் இல்லையா அது போல தான்,
2000 ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்து கொண்டிருந்த ஒரு பங்கு 200 ருபாய் அளவிற்கு CORRECTION வந்த பொழுது இரக்கத்தை சந்தித்தது என்றால்! அந்த பங்கு மறுபடியும் முன்னர் விலைக்கு செல்லுமா? மேலும் அந்த விலைகளையும் கடந்து தொடர்ந்து ஏறுமா என்று தெரிந்தால் தான் அந்த பங்கை குறைந்த விலைக்கு வாங்க நமக்கு மனது வரும்,
அதே நேரம் 2000 ரூபாய்க்கு விற்ற பங்கு 200 ரூபாய்க்கு வந்து விட்டதை சாதாரணமாக எண்ணி பாருங்கள், எவளவு பெரிய நட்டத்தை இந்த பங்கு 2000 ரூபாயில் வாங்கியவர்களுக்கு கொடுத்துள்ளது, இந்த பங்கை நம்பி நம்மால் முதலீடு செய்ய முடியுமா? மனசு வருமா? பயம் வராதா? எண்ணி பாருங்கள் சத்யம் பங்குகளை 300 ரூபாய்க்கும் 400 ரூபாய்க்கும் வாங்கி விற்ற நமக்கு 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் வரும் பொழுது வாங்குவதற்கு மனது வந்ததா, மாறாக பயம் தானே வந்தது,
இது போல தான் நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவது நமக்கு எப்பொழுது ஓர்வித பயத்தினை தரும், அதே நேரம் இது போன்று நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவதற்கு, அதாவது இறங்கினாலும் இந்த பங்கு முதலீடு செய்வதற்கு ஏற்ற பங்கு தான் என்பதினை நிரூபிப்பதற்கு சில விஷயங்கள் உள்ளது, அதாவது குற்று உயிரும் குலை உயிருமாக கிடக்கும் ஒரு வீரரை சோதித்து அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர் இவர் வெகு விரைவில் குணமடைவார்! முன்பை விட சாகசங்கள் புரிவார் என்று சொன்னால் நமது பயம் தெளிந்து நன்பிக்கை கொள்வோம் இல்லையா!
அது போல்தான் ஒரு நல்ல நம்பிக்கையான மருத்துவராக நமக்கு ஒருவர் இருக்கிறார் அவர்கள்தான் EPS மற்றும் PE RATIO, ஆகவே இவர்களை கொண்டு நன்றாக இறங்கி தற்பொழுது குற்று உயிருமாக குலை உயிருமாக இருக்கும் ஒரு பங்கை தேறுமா தேறாதா என்பதினை இந்த மருத்துவர்கள் கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம், ஆகவே இவர்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.
EPS
EPS என்பது EARNING PER SHARE என்று அர்த்தமாகும், அதாவது இந்த EPS என்ற அளவு சில எண்களின் வடிவில் நமக்கு கிடைக்கும், அதாவது 10, 12, 15 என்ற எண்களாக, இது போன்ற எண்களை கொண்டு நாம் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம், அவற்றை பற்றி தொடர்ந்து பார்ப்போம், அதற்கும் முன் EPS என்பது என்ன விதமான விஷயத்தை நமக்கு அறியத்தருகிறது என்பதினை தெரிந்து கொள்வோம்,
பொதுவாக EPS என்பது ஒரு நிறுவனம் தனது வியாபாரங்களின் மூலம் பெரும் லாபங்கள் எவளவு என்பதினை நமக்கு தெரிவிக்கும் ஒரு குறியீடு ஆகும் , இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு மளிகை கடைகாரர் ஒரு மாத காலத்திற்கு தனது வியாபரத்தின் வருமானம் என்ன, இந்த மாதத்தின் செலவு என்ன என்பதினை கூட்டி கழித்து இறுதியாக அவருக்கு கிடைக்கும் லாபம் எவளவு என்பதினை தெரிந்து கொள்வது போல தான்,
பொதுவாக மளிகை கடைக்கு அவர் ஒருவரே உரிமையாளராக இருப்பார், ஆகவே வரும் லாபம் அல்லது நட்டம் முழவது அவரையே சாரும், அதே நேரம் அந்த மளிகை கடைக்கு ஒரு இரண்டு பேர் பாட்னர் என்ற முறையில் இருந்தால் வரும் லாபம் அல்லது நட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும்,
இவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படும் லாபம் அல்லது நட்டம் ஒரு நபருக்கு சராசரியாக எவளவு என்று சொல்லபடும் இல்லையா, அதாவது ஒருவருக்கு 10000 லாபம் என்றால் அந்த மளிகை கடை மொத்தமாக இந்த மாதம் சம்பாதித்து கொடுத்தது 30000 ருபாய் ஆகும், ஆனால் ஒருவருக்கு 10000 கிடைத்தது என்று தானே சொல்வோம்,
அதே போல்தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு பெரிய நிறுவனம் தனது வியாபாரத்தின் மூலம் பெரும் லாபத்தினை தனது நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்கும், அப்பொழுது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுப்பார்கள், அதே நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முதலீடு செய்து இருப்பார்கள்,
ஒருவர் 50000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், ஒருவர் வெறும் 5000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், அதே நேரம் இரண்டு பேரும் முதலீடு செய்தவர்கள் தான், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் அந்த நிறுவனம் உழைக்கின்றது, ஆகவே முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்ததிற்கு சமமாக கிடைக்கும் லாபத்தினை பிரித்து கொடுக்க தனது மொத்த லாபத்தையும் எத்தினை பங்குகள் உள்ளதோ அத்தினை பங்குகளுக்கு சமமாக வகுத்து கொடுப்பார்,
இவ்வாறு கொடுக்கும் போது அவரவர் முதலீடுக்கு தகுந்தார்ப்போல் லாபங்கள் வேறுபடும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபம் அனைவருக்கும் ஒன்று தான், ஆகவே ஒரு நிறுவனத்தின் உண்மையான வியாபாரத்தின் மூலம் (அதாவது ஒரு பொருளை விற்று அல்லது வாங்கி அதன் மூலம் பெறப்படும் லாபம் ) பெறப்படும் ஒரு பங்கிற்கான லாபம் என்ன என்பதினை நமக்கு சொல்வது தான் EPS ஆகும்,
இந்த EPS ஐ கணக்கிடுவதற்க்கான கணக்கீடுகள் :
பொதுவாக நாம் இதனை கணக்கீடு செய்ய வேண்டும் என்பதில்லை, அநேக வலை தளங்கள் இதனை தந்து கொண்டுள்ளது, இருந்தாலும் அதன் கணக்கீடு முறை என்ன என்பதினை தெரிந்து கொள்வது அவசியமே
EPS = Net Profit / Equity Cap * Face Value
அதாவது ஒரு நிறுவனத்திற்கு 10 ருபாய் FACE VALUE மதிப்புள்ள 10 கோடி பங்குகள் இருப்பதாகவும், அந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10 கோடி வருமானம் செய்வதாகவும் கொண்டால், அதன் EPS கீழ் கண்ட முறையில் வரும்
10cr/10cr * 10 = 10,
SO EPS = 10
அதாவது இந்த நிறுவனம் இந்த மாதம் ஒரு பங்கிற்கு 10 ருபாய் லாபமாக கொடுத்துள்ளதாக அர்த்தம், அதவாது உண்மையாக வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது.
சரி அடுத்து PE RATIO பற்றி பார்ப்போம்
பொதுவாக PE RATIO என்பது சந்தையில் ஒரு பங்கு எவ்வாறு வர்த்தகம் ஆகிறது என்பதினை குறிப்பதாகும், இதை நீங்கள் இப்படி எடுத்துக்கொண்டால் சற்று உங்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்காது, அதாவது ஒரு பங்கு சந்தையில் என்ன லாபம் செய்கிறது என்பதினை குறிக்கும் ஒரு குறியீடு என்ற அளவில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,
இப்படி வைத்துகொண்டால் உங்களுக்கு EPS யும் PE RATIO வையும் ஒப்பிட்டு பார்த்து அதன் மூலம் ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு உபயோகமாக இருக்கும், ஆகவே இப்படியே மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதே நேரம் PE RATIO என்றால் என்ன என்பதினையும் சொல்லி விடுகிறேன் இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்,
அதாவது ஒரு பங்கு உண்மையாக வியாபாரம் செய்து பெரும் லாபத்தினை விட எத்தினை மடங்கு அதிகமாக பங்கு சந்தையில் வர்தகமாகிறது என்பதினை சொல்லும் ஒரு குறியீடு ஆகும், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்வது பயனுள்ளதாக இருக்கும், அதாவது பங்கு சந்தை எப்பொழுதுமே உண்மையான மதிப்பில் வர்த்தகம் ஆகாது! ஒரு வருடம், இரண்டு வருடம் அல்லது அதற்கும் மேல் வரும் நாட்களில் இந்த நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலே தான் வர்த்தகமாகும், ஆதலால் தான் இதனை ஊக வணிகம் என்றும் சொல்கிறோம்,
மேலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இருப்பதும் இதனாலேயே தான், இதற்க்கு உதாரணமாக நாம் முன்னர் பார்த்த BUS STAND உதாரணத்தை நினைத்து பாருங்கள், BUS STAND வரும் என்ற ஒரு புரளியினால் அடித்து பிடித்து அதன் அருகில் உள்ள நிலங்களை வாங்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தாயார இருக்கும் வர்த்தகர்களின் செயல்களினாலேயே அதன் விலை அடி மட்டத்தில் இருந்து எங்கோ பறந்து விடுகிறது இல்லையா அது போல்தான்,
இங்கு எப்பொழுதும் இப்படி ஊகத்தின் அடிப்படையில் தான் வர்த்தகம் நடக்கும், என்ன செய்வது! பாம்பு திங்கும் ஊருக்கு போனால் நடுத்துண்டம் கேட்டால் அதான் நமக்கு மதிப்பு, இங்கு இப்படி தான் கண்டுக்கொள்ளாதீர்கள், அதே நேரம் எவளவு தான் ஊகத்தின் அடிப்படையில் ஏறினாலும்! உண்மை என்ற நிலை சில நேரங்களில் வெளிப்படும், அப்பொழுது ஒரு மிகப்பெரிய ஆட்டங்கள் இருக்கும்! அது போன்ற ஆட்டங்களில் தான் பங்குகள் தடாலடியாக பாதாளத்திற்கு வருகிறது,
இப்படி வரும் போது ஒருவரின் உண்மை என்ன பொய் என்ன என்பது அனைவருக்கு தெரியும், இது போன்ற நேரங்களில் இந்த EPS மற்றும் PE RATIO நமக்கு கடவுள் போல் கைகொடுக்கும், இதனை சிறு உதாரண கதை மூலம் சொன்னால் எளிதாக இருக்கும், அதாவது சண்முக பாண்டியன் என்ற ஒரு நண்பர் சென்னையில் வசிப்பதாகவும், அண்ணா நகரில் அவருக்கு ஒரு GROUND நிலம் இருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், அதன் தற்பொழுதைய மதிப்பு 5 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள்,
குடும்ப செலவுக்கென்று நிலையான வருமானமும் இவருக்கு உண்டு, எந்த வம்பு தும்புக்கும் செல்லாத தான் உண்டு தன் வேலை உண்டு என்று OFFICE அதை விட்டால் குடும்பம் என்று வாழ்ந்து வந்த நல்ல நபர், இவரின் அந்த அண்ணா நகரின் இடத்தின் மேல் பக்கத்து வீட்டு நண்பருக்கு ஒரு கண், மனிதன் 5 கோடி தருவதாகவும் கேட்டு பார்த்தார், என்ன செய்வது சண்முகப்பாண்டியன் ஒரே அடியாக மறுத்து விட்டார்,
6 கோடி தருவதாகவும் சொல்லியாகிவிட்டது, முடியாது என்றே மறுத்து விட்டார், வேண்டுமானால் 8 கோடிக்கு தருகிறேன் என்று சண்முகம் சொல்லி விட்டார், அவளவு விலைக்கு வாங்குவது நல்லது இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர் அமைதி ஆகி விட்டார், இதில் சன்முகப்பண்டியனுக்கு ஒரு வித மகிழ்ச்ச்யும் கூட இருந்தது, சத்தம் இல்லாமல் கலரை தூக்கியும் விட்டுக்கொண்டார்,
என்ன செய்வது விதி வேறு மாதிரி இருந்து விட்டது, ஒரு நல்ல நாளில் அவரின் குடும்பத்திற்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பம், இவரை தவிர அவரின் குடும்பம் மொத்தமும் ஒரு உறவினர் திருமணத்திற்கு CAR இல் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து, அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்தால் கண்டிப்பாக காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையை மருத்துவர் தந்துவிட்டார்,
அதற்க்கு ஈடாக ஒன்னரை கோடியில் இருந்து இரண்டு கோடி செலவு ஆகும் என்று குண்டையும் தூக்கி கையில் குடுத்து விட்டார், என்ன செய்வார் மனிதர், தான் உண்டு தன் வேலை உண்டு என்று குடும்பத்துடன் மட்டும் இருந்த நல்ல மனிதர், என்னதான் சேமிப்பு இருந்தாலும் இவளவு பெரிய தொகை எப்படி!!!!, யோசித்தார் மனிதன் அடுத்த நிமிடம் பக்கத்து வீட்டுக்காரர் முன் நின்றார்,
தனது நிலை விளக்கி அண்ணா நகர் இடத்தை வாங்கும் படி மன்றாடினார், விடுவாரா பக்கத்து வீட்டுக்காரர், இல்லப்பா நீ முடியாதுன்னு சொன்னவுடனே சைதாபேட்டையில் ஒரு இடம் வந்தது வாங்கி விட்டேன், அந்த பணம் இப்போ இல்லையே!, துடித்தே போனார் மனிதன்! அண்ணே நீங்க ஏதாவது பண்ணி வாங்கிக்கணும் எனக்கும் நீங்க சொன்ன பணம் கூட வேண்டாம்! அதில் பாதி குடுங்க போதும் என்று அலறியே விட்டார்,
விடுவாரா நம்ம அண்ணன்! இல்ல சண்முகா என்னிடம் அவளவு பணம் இல்ல இப்போ, கையில் ஒரு கோடி தான் இருக்கு வேண்டுமானால் இருன்னொரு ஒரு கோடி புரட்டி பார்க்கலாம் அதுக்கு மேல முடியாது, அண்ணே என்னன்னே இப்படி சொல்றீங்க தயவு பண்ணுன்கனே, நான் என்ன பண்றது சண்முகா, சரி உனக்காக வேண்டும் என்றால் நகையை அடகு வைத்து இன்னும் ஒரு 50 லட்சம் சேர்த்து தருகிறேன், அதற்கு மேல் என்னால் முடியாது என்றவுடன் வழி இல்லாமல் தாய் பத்திரத்தை கொடுத்து இரண்டரை கோடியை பெற்று கொண்டு சந்தோசமாக குடும்பத்தை காப்பாத்தி விட்டார்,
சண்முகத்திற்கு அடுத்த வீட்டுக்காரர் தெய்வமாக தான் தெரிந்தார், ஆனால் அடுத்த வீட்டுக்காரருக்கு உள்ளுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு, சரி விடுங்கள் நாம் விசயத்திற்கு வருவோம்,
இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொண்டது என்ன, இதற்க்கும் EPS மற்றும் PE RATIO வுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்து விடுவோம், அதாவது சண்முக பாண்டியனின் குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்ளாவிட்டால் அவர் அந்த இடத்தை விற்கும் நினைப்புக்கே வந்து இருக்கு மாட்டார்,
அடுத்து சண்முக பாண்டியனின் நிலை அறிந்து பாதி விளைக்கும் வாங்கி விடலாம் என்று யோசித்து அடுத்த வீட்டுக்காரர் வாங்கி விட்டார், இருந்தாலும் அந்த இடத்தின் உண்மையான மதிப்புக்கும் கீழ் கிடைக்கிறது என்றவுடனே தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க தயாராக இருந்தார்,
இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது , அதாவது அந்த இடத்தின் மதிப்பு 5 கோடி ஆனால் சன்முகப்பாண்டியனின் குடும்ப நிலை அதை பாதி விலைக்கு விற்க தயாராக அவரை மாற்றி விட்டது, அதே நேரம் 8 கோடிக்கு வாங்க மறுத்த அடுத்த வீட்டுக்காரர் அதன் உண்மையான விளைக்கும் கீழ் கிடைப்பதினால் தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க முற்படுகிறார்,
இவளவு RISK எடுக்க இருவருக்கும் காரணம் உள்ளது இல்லையா, அது தான் இங்கு முக்கியம், சந்தை மிகப்பெரிய CORRECTION ஐ சந்திக்கும் போது தனது உண்மையான மதிப்புக்கு அருகில் வரும் வாய்ப்புகள் உண்டு அந்த நேரத்தில் தான் நாம் வாங்க வேண்டும், அதாவது இதனை வேறு ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம்
அதாவது சன்முகப்பாண்டியனின் குடும்ப சூழ்நிலையை நமக்கு உணர்த்துவது PE RATIO ஆகும், அதே போல் அவரின் அண்ணா நகர் GROUND இன் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துவது EPS ஆகும், இங்கு தனது குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தான் தனது 5 கோடி மதிப்புள்ள இடத்தினை வெறும் இரண்டரை கோடிக்கு விற்கவும் தயாராகிறார்,
அதாவது சந்தை CORRECTION ஐ சந்தித்ததால் தான் PE RATIO இறங்கி வந்துள்ளது, இது போன்ற இறக்கத்தினால் தான் EPS அளவை விட PE RATIO கீழே வரும் , ஆகவே EPS என்பது உண்மையான மதிப்பு, PE RATIO என்பது மாயையான ஊக மதிப்பு, சந்தை எப்பொழுதும் ஊக மதிப்பில் தான் வர்த்தகம் செய்யும்,
அப்படியானால் உண்மையான மதிப்பிற்கு கீழ் ஊக மதிப்பு CORRECTION என்ற காரணத்தினால் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், அடித்து பிடித்து வாங்க வேண்டாமா, ஏனெனில் மறுபடியும் ஊக மதிக்கு சென்று விடும் இல்லையா, அதாவது உங்களிடம் 5 கோடி மதிப்புள்ள சொத்தை 2 கோடிக்கு யாராவது அவரின் சூழ்நிலையின் காரணமாக விற்க முற்ப்பட்டால் வாங்குவீர்களா மாட்டீர்களா? வாங்குவீர்கள் தானே!,
அதே மாதிரி தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான லாபத்தினை குறிக்கும் குறியீடான EPS ஐ விட பங்கு சந்தையில் வர்த்தகமாகும் விலையினை குறிக்கும் குறியீடு குறைந்தால் வாங்குவோமா வாங்கமாட்டோமா, வாங்கி ஆக வேண்டும் இல்லையா, அப்படி தான் EPS ஐ விட குறைவாக எப்பொழுதெல்லாம் ஒரு பங்கின் PE RATIO வர்தகமாகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,
இது போன்ற நிகழ்வுகள் எப்பொழுது அனைத்து பங்குகளிலும் ஏற்படும், சந்தை மிகப்பெரிய இறக்கத்தினை சந்திக்கும் போது தான் ஏற்படும், ஆகவே அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,
சரி PE RATIO வை எப்படி கணக்கீடு செய்வது அதனை பற்றியும் பார்த்து விடுவோம்
PE RATIO = CMP/EPS
தற்பொழுது அந்த குறிப்பிட்ட பங்கு வர்த்தகமாகும் விலையுடன் முன்னர் நமக்கு கிடைத்த EPS என்ற அளவுடன் வகுத்தால் நமக்கு கிடைக்கும் அளவு PE RATIO ஆகும், இந்த அளவு EPS ஐ விட குறைவாக இருந்தால், 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் 5 ரூபாய்க்கு கிடைப்பது போல, அதே நேரம் EPS ஐ விட PE RATIO அதிகமாக இருந்தால் 10 ரூபாய் பொருள் 12 ரூபாய்க்கு கிடைப்பது போல, இது லாபம் இல்லை தானே, ஆகவே EPS ஐ விட PE RATIO குறைவாக இருந்தால் வாங்க வேண்டும், அதிகமாக இருந்தால் வாங்கக்கூடாது
உதாரணம்
சந்தையில் ஒரு பங்கின் விலை = 120
அதன் EPS = 10
SO அதன் PE RATIO = 120/10 = 12
இந்த மதிப்பு EPS ஐ விட அதிகம் இருப்பதால் இந்த பங்கை வாங்கக்கூடாது.
அடுத்த ஒரு உதாரணம்
சந்தையில் ஒரு பங்கின் விலை = 80
அதன் EPS = 10
SO அதன் PE RATIO = 80/10 = 80/10 = 8 ,
இந்த மதிப்பு EPS மதிப்பான 10 ஐ விட குறைவாக இருப்பதால் இது நல்ல நிலையில் உள்ளது, ஆகவே இதனை வாங்க வேண்டும்
மேற்கண்ட இரண்டு விசயங்களில் இருந்து நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், ஒரு பங்கு 120 ருபாய் இருக்கும் போது, நமது கணக்கீட்டால் கணக்கிடும் போது அதன் உண்மையான மதிப்பை விட அதிகமான மதிப்பில் இருப்பதால் அதை வாங்க கூடாது, அதே பங்கு CORRECTION ஏற்பட்ட பிறகு 80 ரூபாய்க்கு வரும் போது அதன் மதிப்பு குறைந்துள்ளதால் இப்பொழுது வாங்க வேண்டும் புரிகிறதா,
சரி இந்த பதிவுடன் TECHNICAL ANALYSIS வகுப்புகள் முடிந்தது, அடுத்த பதிவில் தின வர்த்தகர்கள் வர்த்தகத்திற்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன என்பதினை பற்றி பார்த்து விட்டு இனிதே நிறைவு செய்வோம்

திங்கள், 28 ஜூலை, 2014
28
கடந்த பதிவில் FLAG, PENNANT, W ஆகிய PATTERN களை பற்றி பார்த்தோம்.
இப்பொழுது ROUNDING BOTTOM என்ற விஷயத்தை பற்றி பார்ப்போம், பொதுவாக இது போன்ற விஷயங்கள் குறைந்தது 3 மாதம் முதல் 1 வருடம் அல்லது அதற்க்கு மேல் கால அளவுகளை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம்,
இது போன்ற விசயங்களை வைத்து நீண்ட கால அடிப்படையில் சில நல்ல பங்குகளை TECHNICAL ஆக நாம் கண்டு கொள்ளலாம், பொதுவாக இந்த விஷயம் நல்லதொரு இறக்கம் சந்தையில் ஏற்பட்ட பின்பு உருவாகும் ஒரு வடிவமாகும், இந்த வடிவத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் சந்தையில் CORRECTION எந்த மாதிரி வருகிறது, இவ்வாறு இறக்கம் ஏற்படும் போது எப்படியான வடிவங்களில் ஏற்படுகிறது என்பதினை தெரிந்து கொள்வது சற்று பயனுள்ளதாக இருக்கும்,
ஏனெனில் சந்தையில் எப்பொழுதெல்லாம் CORRECTION வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு சில வடிவங்களின் கூட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டே நடந்து வந்து கொண்டு இருக்கிறது, இது போன்ற செயல் TECHNICAL ANALYSIS இன் தந்தை என போற்றப்படும் திரு CHARLES DOW அவர்களின் விதிமுறையான "HISTORY REPEATS IT SELF" என்பதை ஞாயபகபடுத்திக்கொண்டே இருக்கும், சரி விசயத்திற்கு வருவோம்,
CORRECTION எப்படி ஏற்படுகிறது –
பொதுவாக CORRECTION என்பதினை இரு வகையாக பிரிக்கலாம், ஒன்று MOMENTUM TREND LINE ஐ உடைக்காமல் அங்கிருந்து SUPPORT எடுத்து திரும்பி புதிய உயரங்களை எட்டும் சராசரி CORRECTION, MOMENTUM TREND LINE ஐயும் உடைத்து மிக பலமான வீழ்ச்சிகளை கொடுக்கும் BIG CORRECTION,
இதில் முதல் வகை அடிக்கடி ஏற்படக்கூடியது, உதாரணமாக 2004, 2005, 2006, 2007 போன்ற வருடங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை சொல்லலாம், இரண்டாவது வகை 2008 ஆம் ஆண்டு JANUARY ல் ஏற்பட்ட வீழ்ச்சியை போன்றது, நாம் இப்பொழுது பார்க்கப்போவது இரண்டாவது வகை CORRECTION பற்றி தான், ஏனெனில் இந்த இரண்டாம் வகை தான் மிக நீண்ட நாட்களுக்கு நடந்து, CONSOLIDATION எனப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மாறி பிறகு BREAK OUT என்ற விளைவினை பெற்று தொடர்ந்து முன்னேறும் மிக நீண்ட செயல் பாடுகளை கொண்டது,
இதற்க்கு தான் வடிவங்கள் உண்டு, அதற்க்கான விளைவுகளும் உண்டு, மாறாக முதல் வகையான CORRECTION ஐ பொறுத்தவரை உடனே நிகழ்ந்து விரைவிலேயே அடுத்த கட்டத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியது, இதற்க்கு ஒன்றும் பெரிய விளைவுகள் இருக்காது, பொதுவாக இது ஏதாவது அனுமானத்தினாலும், செய்திகளினாலும் உந்தப்படுவது, சரி இப்பொழுது இரண்டாவது CORRECTION ஐ பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்
MOMENTUM TREND LINE ஐ உடைத்து மிக அதிகமாக இறக்கம் பெரும் CORRECTION:-
பொதுவாக இது போன்ற CORRECTION நல்ல தொரு உயர்வை அடைந்த பிறகே ஏற்படும், அதே நேரம் இது போன்ற உயர்வுகள் ஏற்படும் முன்பு நாம் முன்னர் பார்த்த SINGLE CANDLE, DOUBLE CANDLE என்ற வகையில்! தான் இறங்கப்போவதாக தொடர்ந்து அறிவித்த பிறகே தனது இறக்கத்தை ஆரம்பிக்கும், மேலும் இது போன்று CANDLE கள் ஒரு RISING WEDGE என்ற அபாயகரமான வடிவங்களுக்கு உள்ளே ஏற்பட்டு அந்த வடிவம் கீழே உடைபட்டவுடன் இறங்க ஆரம்பிக்கும்,
இவ்வாறு இறக்கங்கள் தொடங்கிய பிறகு ஏற்படும் வீழ்ச்சிகள் மிக பலமானதாக இருக்கும், யாரும் கனவிலும் நினைக்காத அளவிற்கு கீழே கொட்டோ கொட்டு என்று கொட்டி விடுவார்கள், இது போன்ற நிகழ்ச்சிகளை தான் BLOOD BATH என்று சொல்வார்கள், இது போன்ற வீழ்ச்சிகள் ஒரு பத்து பதினைந்து நாட்களில் MOMENTUM TREND LINE எனப்படக்கூடிய SUPPORT புள்ளிகளை உடைத்து விடும் அதாவது 2008 ஆம் வருடம் NIFTY யானது 6350 என்ற புள்ளியில் இருந்து 4450 என்ற புள்ளிகளை வெறும் 10 TO 15 நாட்களுக்குள் சென்றடைந்ததை உதாரணமாக சொல்லலாம்,
இவ்வாறு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிகளை அடைந்த பிறகு சந்தையில் எதிர்பார்க்காத ஒரு உயர்வு ஏற்படும் இந்த மாதிரியான உயர்வு எப்படி வெகு விரைவாக இறங்கியதோ அதைவிட விரைவாக உயரும், அதாவது எந்த புள்ளியில் இருந்து கீழே இறங்கி LOW எனப்படும் வீழ்ச்சி புள்ளிகளை சந்தித்ததோ அந்த வீழ்ச்சியில் 61.8% சதவீத அளவிற்கு தோராயமாக உயர்ந்து விடும்,
அதாவது NIFTY 4450 என்ற புள்ளியில் இருந்து 4545 என்ற புள்ளியை வெறும் 7 நாட்களுக்குள் அடைந்ததை போன்று, மேற்கண்ட விசயங்களில் மூன்று படிப்பினைகளை நாம் அறியலாம்,
அதாவது முதலில் RISING WEDGE எனப்படும் வடிவத்திற்குள் நாம் முன்னர் பார்த்த SINGLE , DOUBLE போன்ற CANDLE களை வைத்து வீழ்ச்சியை அறிவிப்பது, இரண்டாவது அந்த வடிவத்தை உடைத்து மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திப்பது, மூன்றாவது சந்தை அவளவு தான் என்ன நடக்கப்போகிறது என்று எல்லோரும் பூகம்பம் வந்தது போல் சந்தையை கண்டு அஞ்சி நிற்கும் போது திடீரென வீழ்ச்சியில் இருந்து அதி விரைவாக ஒரு 61.8 % அளவிற்கு உயர்ந்து விடுவது,
இப்பொழுது வீழ்ச்சியின் கோர தாண்டவம் ஓரளவிற்கு முடிந்து விடும், அடுத்ததாக வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் நமது பொறுமையை சோதிப்பது போலவும், நித்தய கண்டம் பூரண ஆயுள் என்ற வகையிலும் நம்மை படுத்தி எடுத்து விடும் ,
அதாவது 61.8 % உயர்ந்த பிறகு மறுபடியும் வீழ்ச்சி! பிறகு உயர்வு! பிறகு வீழ்ச்சி என்று தொடர்ந்து இயங்க ஆரம்பிக்கும், இந்த நகர்வுகள் எல்லாம் LOWER TOP, LOWER BOTTOM என்ற வகையில் ஒரு SLOPING CHANNEL வடிவத்தில் நடக்க ஆரம்பிக்கும், இது போன்ற நேரங்களில் முன்னர் நாம் சந்தித்த மிக விரைவான வீழ்ச்சியினால் ஏற்பட்ட LOW புள்ளியையும் உடைத்து புதிய LOW புள்ளிகளை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்,
இப்படி நடக்கும் ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும் முதலீட்டாளர்கள் தின வர்த்தகர்கள் தங்கள் கைகளை சுட்டுக்கொண்டே இருப்பார்கள், ஒரு வழியாக எல்லோரும் CORRECTION ஐ ஏற்றுக்கொண்டு சந்தையை விட்டு வெளியேர ஆரம்பிப்பார்கள்,
இந்த நிலையில் சந்தை தனது நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிற்குள் வைத்து மேலும் கீழும் ஆடி TECHNICAL ஆக தொடர்ந்து ஏறுவது போல் காட்டி அனைவரையும் ஏமாற்றி மறுபடியும் கீழே இறக்கி, தொடர்ந்து இன்னும் இறங்குவது போல் காட்டி சற்று கீழே இறக்கி மறுபடியும் தொடர்ந்து உயர்ந்து BREAK OUT என்ற நிலையை அடையும், (எப்பொழுதுமே சந்தை நல்லதொரு CORRECTION மற்றும் CORRECTION இல் இருந்து மீளும் போதும் தவறுகளை செய்த பின்பே ஒரு நிலையான தன்மையை அடையும் என்பது எனது அனுபவ பாடம் ),
இவ்வாறு உயரும் நிலை ஏற்பட்டவுடன் தொடர்ந்து ஏற ஆரம்பிக்கும், இந்த நிலை HIGHER BOTTOM மற்றும் HIGHER TOP என்ற வகையில் அமைந்து புதிய உயரங்களை அடையும், இந்த நிலை நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டு தான் புதிய உயரங்களை அடையும், ஏன் எனில் மறுபடியும் ஒரு புதிய குழந்தை பிறப்பதற்கு சமமானது இந்த CORRECTION க்கு பிறகு ஏற்படும் உயர்வு,
சரி இந்த இடத்தில் நாம் ROUNDING BOTTOM பற்றி தெரிந்து கொள்வது சரியாக இருக்கும், அதாவது SLOPING CHANNEL என்ற வடிவத்தில் இறக்கங்கள் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து உயருவதற்கு BREAK OUT என்ற நிலையை அடையும் இந்த இடைப்பட்ட இடத்தில் தான் CONSOLIDATION எனப்படும் பங்குகளை நல்ல விலைக்கு வாங்கும் நிகழ்வுகள் நடக்கும்,
இந்த நிகழ்வுகளுக்கு பின் ஏற்படும் BREAK OUT நல்ல முறையில் சக்திகளை பெற்று நகரும், இந்த CONSOLIDATION பகுதியில் நாம் பங்குகளை வாங்குவதும் BREAK OUT பெற்ற பிறகு வாங்குவதும் தான் ROUNDING BOTTOM BUYING எனப்படும், இருந்தாலும் தொடர் உயர்வுகள் BREAK OUT பெற்ற பிறகே அதிக சக்தியை பெரும், பொதுவில் எந்த இடத்தில் இருந்து சந்தை வீழ்ச்சியை தொடங்கியதோ அந்த புள்ளியில் இருந்து வரையப்படும் TREND LINE முதல் BREAK OUT என்ற வகையில் சக்தியை பெரும்,
ஆனால் எப்பொழுதும் மூன்றாவதாக அமையும் TREND LINE உண்மையான BREAK OUT ஐ நமக்கு பறை சற்றும், அதாவது SLOPING CHANNEL மூலம் கிடைக்கும் இரண்டாவது BREAK OUT, CONSOLIDATION எனப்படும் நிகழ்வு நடக்கும் வடிவத்தின் மூலம் கிடைக்கும் மூன்றாவது மற்றும் இறுதி BREAK OUT ஆகும், இந்த இடத்தில் தான் ROUNDING BOTTOM BUYING எனப்படும் செயல் ஜரூராக நடைபெறும், சரி CORRECTION மற்றும் ROUNDING BOTTOM ஆகியவையின் படத்தினை பாருங்கள்
PICTURE 1 NIFTY MOMENTUM TREND LINE

PICTURE 2 GENRALY CORRECTION STYLE

PICTURE 3 REAL NIFTY CORRECTIONS

PICTURE 4 ROUNDING BOTTOM BUYING BREAK OUT

ஞாயிறு, 27 ஜூலை, 2014
27

சென்ற பதிவில் CHANNEL என்ற வடிவத்தின் ஆதி அந்தம் பார்த்தோம், இப்பொழுது மீதம் உள்ள சில விசயங்களை பற்றி பார்ப்போம்.
அதன் அடிப்படையில் FLAG PATTERN, PENNANT PATTERN , W PATTERN போன்றவைகளை பற்றி பார்ப்போம்.
FLAG PATTERN
பொதுவாக இந்த வடிவம் அடிக்கடி தொடர் உயர்வுகளுக்கு இடையே ஏற்படும், இது போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கு கம்பத்துடன் கூடிய கொடிகளை ஞாபக படுத்துவதால் இதற்க்கு இந்த பெயர் வைத்தார்கள், அதாவது நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் (HEAD&SHOULDER, CUP, TRIANGLE, CHANNEL) BREAK OUT என்ற நிலையை பெற்று ஒரு பங்கு உயரும் போது ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைந்த பிறகு சற்று இளைப்பாறல் அடைவதற்காகவோ அல்லது கொஞ்சம் PROFIT BOOKING செய்வதர்க்காவோ சற்று தயங்கி பிறகு தனது இலக்குகளை நோக்கி நகர முற்படும்,
இது போன்று தயங்கி நிற்கும் செயல் சில நாட்களுக்கு நடைபெறும், இது போன்று நடைபெறும் செயல்கள் ஏதோ வாச்சான் போச்சான் கதையாக இல்லாமல் அதற்க்கென்று சில விதிமுறைகளை வைத்து செயல்படுவார்கள், இவ்வாறு செயல்படும் போது குறிப்பட்ட நாட்களுக்கு பிறகு அந்த இளைப்பாறல் நடந்த இடத்தை பார்த்தால் எதோ ஒரு வடிவம் உருவாக்கி இருப்பதை நாம் பார்க்கலாம்,
இவ்வாறு ஏற்படும் வடிவங்களுக்கு அல்லது உருவங்களுக்கு தகுந்தார்ப்போல் அந்த பங்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும், இது போன்று consolidation நடைபெறும் நேரங்களில் அடிக்கடி ஏற்படும் உருவத்தின் வகையை சேர்ந்தது தான் இந்த FLAG என்ற வடிவம், இதன் விதிமுறைகளாக நாம் இந்த FLAG அமைப்பின் TOP RESISTANCE எனப்படும் புள்ளிகள் உடைபடும் போது BREAK OUT என்ற நிலையை அடைந்து தொடர்ந்து உயர ஆரம்பிக்கும்,
இதன் முதல் இலக்காக அந்த FLAG அமைப்பின் BODY யும், இரண்டாவது இலக்காக அந்த FLAG அமைப்பின் கம்பத்தின் அளவையும் எடுத்துக்கொள்ளலாம், இதன் S/L ஆக அந்த FLAG அமைப்பின் BODY யின் அடிப்பகுதி செயல்படும், அதே போல் FLAG அமைப்பின் அடிப்பகுதி BREAK DOWN என்ற முறையில் உடைபட்டு தொடர்ந்து இறங்குவதற்கு முற்பட்டால், மேலே சொன்னது போலவே அதன் இலக்குகள அளக்கப்படும், அதே நேரம் இதன் S/L ஆக TOP RESISTANCE என்ற புள்ளிகள் செயல்படும், இவளவு தான் இந்த FLAG வடிவத்தின் விசயங்கள்,
மேலும் சில விசயங்களை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! அதாவது எந்த ஒரு வடிவமும் அல்வா துண்டு போல் CHART படங்களில் உருவாகாது, சித்தன் போக்காகவும் சிவன் போக்காகவும் தான் உருவாகும், இதனை சரியான முறையில் புரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சரி இந்த FLAG PATTERN படங்களை பாருங்கள்
FLAG PATTERN PICTURE 1

PENNANT PATTERN
இதுவும் பங்குகளின் தொடர் உயர்வுகளுக்கு நடுவே அடிக்கடி ஏற்படும் வடிவம் தான், நாம் முன்னர் பார்த்த FLAG அமைப்பினை ஒத்த அதே விளைவுகளை தருவது தான் இந்த வடிவம், FLAG என்றால் கொடி போன்று இருக்கும் என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இது (PENNANT) சற்று வித்தியாசமானது,
அதாவது எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத நகர்வுகளை வைத்து இருக்கும் அதாவது ஒரு பங்கு சில வடிவங்களினால் BREAK OUT என்ற முறையில் தொடர்ந்து உயர முற்படும் போது ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு சென்ற பின், அந்த பங்கில் கண்ணா பின்னா வென PROFIT BOOKING வருவது, அதாவது GAP UP இல் துவங்கி அதே நிலையில் முடிவதும் அடுத்த நாளே GAP DOWN இல் தொடங்கி கீழேயே முடிவது போன்ற நடவடிக்கைகளை தன்னகத்தே வைத்து இருக்கும், அதே நேரம் எல்லாமே ஒரு வட்டத்திற்குள் நடைபெறும் இது போன்ற வடிவங்கள் வரும் போது சில விளைவுகள் ஏற்படும் அவைகளை பற்றி பார்ப்போம்,
அதாவது இந்த வடிவத்தை பார்க்கும் போது நாம் ஆங்கில எழுத்தில் பயன்படுத்தும் "P" எழுத்தை நமக்கு ஞாபகப்படுத்தும், இதனால் தான் இதற்க்கு இந்த பெயர் வைத்துள்ளார்கள், ஆகவே இந்த அமைப்பின் படி இதன் HIGH புள்ளி உடைபட்ட உடன் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும், இதன் S/L ஆக இந்த P என்ற வடிவத்தின் BODY யின் LOW புள்ளி செயல்படும், இலக்குகள் முதலில் P அமைப்பின் BODY யின் அளவும், அடுத்து கம்பத்தின் அளவுமாக இருக்கும், இது சற்று குழப்பத்தை தரும் வடிவம் ஆகவே சரியான பயிற்சி ஏற்பட்டவுடன் இது எளிதாக புரிந்து விடும், அதே நேரம் இதன் LOW புள்ளிகளின் அருகே வரும் போது வாங்குவது சிறந்த முறையாகும், சரி இதன் படத்தை பாருங்கள்
PENANT PATTERN PICTURE 2

“W” PATTERN
இதில் சொல்வதற்கு ஒன்றும் அதிக விஷயங்கள் இல்லை, பார்ப்பதற்கு W என்ற எழுத்தை ஞாபகபடுத்தும், இதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு வழி இருக்கு, அதாவது ஒரு உயர்வுக்கு பிறகு ஒரு நல்ல வீழ்ச்சி ஏற்பட்டு பிறகு அந்த வீழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்து மறுபடியும் கீழே வரும், இவ்வாறு கீழே வரும் புள்ளி இதற்க்கு முன் வந்த LOW புள்ளியின் அருகில் அல்லது அதற்கும் சற்று கீழோ அல்லது அதே புள்ளிக்கோ வந்து திரும்பும், இந்த இடம் முக்கியமான DOUBLE BOTTOM என்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு உயர முற்படும்,
இவ்வாறு உயரும் போது முதலில் எந்த இடத்தில் இருந்து திரும்பியதோ அந்த புள்ளி நமக்கு W என்ற எழுத்தின் பாதியில் உள்ள உயரத்தை நிறைவு செய்து தொடர்ந்து உயர்ந்தால் அது BREAK OUT எனப்படும், இதன் முதல் இலக்காக முதன் முதலில் எந்த இடத்தில் இருந்து கீழே வர ஆரம்பித்ததோ அந்த TOP என்ற புள்ளியும், அதை தொடர்ந்து அந்த W என்ற வடிவத்தின் முழு உயரமும் மேலே செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும், இதற்க்கான S/L ஆக DOUBLE BOTTOM என்ற புள்ளி இருக்கும், இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு மாதிரியான TRIANGLE வடிவத்தை ஒத்து இருக்கும், இதன் படத்தை பாருங்கள்
W PATTERN PICTURE 3

சனி, 26 ஜூலை, 2014
26

கடந்த வாரம் Triangle Pattern பற்றி பார்த்தோம், இப்பொழுது அடுத்த வடிவமான Channel என்ற அமைப்பினை பற்றி பார்ப்போம்,
Channel என்பது Train தண்டவாளத்தை போன்று இரு பக்கங்களிலும் சரியான அளவுகளில் இருப்பது, இந்த channel என்ற அமைப்பின் இடைப்பட்ட பகுதிகளில் பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,
இவ்வாறு நகர்ந்து வரும் போது சேனல் அமைப்பின் Tops எனப்படும் உயரங்களில் தடைகளை சந்தித்து கீழே வந்து, மறுபடியும் சேனல் அமைப்பின் bottom எனப்படும் support பகுதிகளில் தங்கி மறுபடியும் உயர ஆரம்பிக்கும் இவ்வாறு சேனல் அமைப்பின் top பகுதிகளில் தடை எடுத்து கீழே வந்து bottom பகுதிகளில் support எடுத்து மறுபடியும் உயரும் இந்த இடப்பட்ட பகுதிகள் சரியான நேர்கோட்டில் இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த வடிவத்தை நாம் பார்க்கும் போது தண்டவாளத்தின் ஒழுங்கு நன்றாக தெரியும்,
இந்த இடைப்பட்ட பகுதிகளில் எத்தினை முறை வேண்டுமானாலும் நகர்ந்து செல்லலாம், ஆனால் என்று இந்த சேனல் அமைப்பு break out என்ற முறையில் உடைபடுகிறதோ அங்கிருந்து நகர ஆரம்பிக்கும், இவ்வாறு நகர வேண்டிய இலக்குகள் கீழ் நோக்கியதாக இருக்கலாம் அல்லது மேல் நோக்கியதாக இருக்கலாம், எப்படி நகர்ந்தாலும் இந்த அமைப்பின் படி அதன் இலக்கு ஒரே அளவாக தான் இருக்கும்,
அதாவது இந்த சேனல் அமைப்பின்படி கிடைக்கும் இலக்கு இரண்டு பக்கங்களுக்கும் ஒன்றாக தான் இருக்கும், இதன் இலக்குகள் இந்த சேனல் அமைப்பின் இரண்டு புள்ளிகளுக்கும் இடைப்பட்ட உயரமாக இருக்கும், அதே நேரம் இந்த அமைப்பின் படி s/l ஆக நாம் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்! அதாவது உயர்வதற்காக Channel Pattern break out பெற்றால் இதன் s/l ஆக நாம் அந்த சேனல் அமைப்பின் bottom support புள்ளியை தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும், அதே நேரம் இந்த channel அமைப்பிற்குள் ஏற்படும் வேறு ஏதாவது சின்ன சின்ன அமைப்புகளையும், Tend line support களையும், Fibonacci அளவுகளையும் பயன்படுத்தி நமது s/l ஐ சற்று முன்னரே தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு, இவ்வாறு கண்டு பிடிக்க சற்று பயிற்சி தேவை, அந்த பயிற்சி ஏற்பட்டவுடன் இயல்பாக நாம் அதை தேட ஆரம்பித்து விடுவோம்,
பொதுவாக இந்த சேனல் அமைப்பிற்குள் ஒரு பங்கு நகர ஆரம்பித்தால் நாம் அதன் support புள்ளிகளின் அருகே வாங்கி தடை புள்ளிகளான உயரங்களில் விற்று வர்த்தகம் செய்யலாம், அதாவது channel bottom இல் வாங்கி channel top வரும் போது விற்பது என்று வர்த்தகம் செய்யலாம், இப்படி செய்தால் நமது s/l மிக அருகிலே இருக்கும், பெரிய இழப்புகள் ஏதும் இருக்காது,
அதாவது ஒரு பங்கு 100 என்ற புள்ளியை சேனல் support (Bottom) ஆகவும் 135 என்ற புள்ளியை சேனல் தடையாகவும் (Top) பெற்று இருந்தால், நமது வர்த்தகம் 100 to 102 என்ற புள்ளி வரும் போது buying செய்து 135 என்ற புள்ளி வரும் போது விற்க வேண்டும், ஒரு வேலை நீங்கள் வாங்காமல் அந்த பங்கை 133 to 135 என்ற புள்ளிகளில் இருக்கும் போது கவனிக்க நேரிட்டால் இந்த புள்ளியின் அருகே விற்று மறுபடியும் 100 என்ற புள்ளி கீழே வரும் போது வாங்கிக்கொள்ளலாம்,
இது போன்று நீங்கள் செய்வதால் உங்களின் s/l மிக அருகிலேயே இருக்கும் அதாவது 135 என்ற புள்ளி சேனல் தடை புள்ளியாக இருப்பதால் இந்த புள்ளியை மேலே கடந்தால் அது தொடர்ந்து ஏற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும், ஆகவே நீங்கள் 134 to 135 என்ற புள்ளியின் அருகே விற்றால் உங்களின் s/l 135, அப்படி 135 என்ற புள்ளியை உடைத்து மேலே சென்றால் நீங்கள் 135 என்ற புள்ளியை s/l ஆக வைத்து இருப்பதால் உங்களின் நட்டம் வெறும் 1 to 2 ரூபாயாக தான் இருக்கும், மேலும் இந்த புள்ளியை உடைத்து இருப்பதால் தொடர்ந்து ஏறும் வாய்ப்புகளும் இருப்பதால் உடனே நீங்கள் buying செய்யலாம் புரிகிறதா!
ஆகவே சேனல் அமைப்புகளில் இது போன்று வர்த்தகம் செய்யும் சாத்தியங்கள் இருப்பதால் இதனை நன்றாக பயன்படுத்தலாம், அப்படி இல்லை இது எனக்கு கஷ்டமாக உள்ளது என்றால் இந்த சேனல் அமைப்பு எப்பொழுது உடைபடுகிறதோ அப்பொழுது வரை பொறுத்து இருக்கலாம்,,,
சரி இந்த சேனல் அமைப்பை பொறுத்தவரை மூன்று விதங்களில் நமது chart படங்களில் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு, அவைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம், அதாவது முன்னர் நாம் Head & Shoulder என்ற அமைப்பில் பார்த்தோம் இல்லையா அதே போன்ற வகையில் தான் இந்த சேனல் அமைப்பும் இருக்கும், அதாவது Normal Channel Pattern, Raising Channel Pattern, Sloping Channel Pattern என்ற இந்த மூன்று விதங்களில் ஏற்படும், இவை ஒவ்வொன்றுக்கும் நாம் ஒவ்வொரு மாதிரி செயல்பட வேண்டும், அவைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம் ,
NORMAL CHANNEL PATTERN
இந்த அமைப்பை பொறுத்த வரை நாம் இதற்க்கு முந்தய பத்தியில் படித்தது போலவே செயல்பட வேண்டும், அதாவது கீழே வரும் போது வாங்கி மேலே சென்ற பின் விற்பது, மேலும் மேலே விற்று கீழே வந்த பின்பு வாங்குவது, பிறகு எந்த பக்கம் break out பெறுகிறதோ அந்த திசையில் நமது வர்த்தக பாதைகளை மேற்கொள்வது, இதற்க்கான s/l நாம் முன்னர் பார்த்த விதங்களில் எடுத்துக்கொள்வது, அவளவு தான் விஷயம்! சரி இதற்கான படத்தை பாருங்கள்

RAISING CHANNEL PATTERN
இந்த Raising Channel Pattern ஐ பொறுத்த வரை இதன் வடிவம் நாம் முன்னர் சொன்னது போல தண்டபாலத்தை போல தான் இருக்கும், அதே நேரம் சற்று செங்குத்தாக இருக்கும், இதனை பொறுத்த வரை உயரங்களில் விற்று கீழே வரும் போது வாங்கலாம் என்பதும், கீழே வந்த பின் வாங்கி உயரங்களில் விற்கலாம் என்பதும் அநேகம் தடவை யோசித்து செயல்பட வேண்டிய விசயமாகும்! ஏனெனில் ஏமாற்றும் வாய்ப்புகள் உள்ளது,
செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்கும் கயிற்றில், ஏறுவதில் இருக்கும் சிக்கல் சற்று அதிகம், விழுந்தால் ஏதும் மிஞ்சாது, அதே நேரம் இந்த அமைப்பில் buying செய்வதற்கான break out கிடைத்தாலும் கொஞ்சம் யோசித்து அநேக சாத்தியக்கூறுகளும் சாதகமாக உள்ளதா என்று பார்த்து வர்த்தகம் செய்வது பாதுகாப்பானது,
அதற்காக வர்த்தகம் செய்யவே வேண்டாம் என்று சொல்ல வில்லை பாது காப்பை பலப்படுத்தி களத்தில் இறங்குவது வெற்றிக்கான முதல் செயல், அதே நேரம் இந்த அமைப்பில் selling செய்வதற்கான break out கிடைத்தால் தைரியமாக ஈடுபடலாம் விரைவான லாபங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் இந்த அமைப்பிற்கு அதிகம், இதன் இலக்குகள் மற்றும் s/l எல்லாம் நாம் முன்னர் பார்த்தது போலவே தான், சரி இந்த படத்தை பாருங்கள்

SLOPING CHANNEL PATTERN
Sloping Channel Pattern ஐ பொறுத்தவரை அப்படியே Raising Channel Pattern க்கு எதிர் பதமானது, இந்த அமைப்பு சற்று கீழ் நோக்கியது போல் காட்ச்சியளிக்கும், ஆனால் சரியான அளவுகளுடன் சேனல் என்ற வடிவத்தில் தான் இருக்கும், இந்த அமைப்பை பொறுத்தவரை selling செய்வதற்கு break out கிடைத்தால் சற்று யோசித்து! அனைத்து சாத்தியக்கூறுகளும் சாதகமாக இருக்கின்றதா என்று பார்த்து வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் , அதே நேரம் buying செய்வதற்கான break out கிடைத்தால் நன்றாக தைரியமாக வர்த்தகத்தில் ஈடுபடலாம், முன்னர் சொன்னது போலவே இதன் இலக்குகளை கண்டு பிடிப்பதும் s/l ஐ கண்டு பிடிப்பதும் ஒரே முறை தான்,
பொதுவாக Raising Channel மற்றும் Sloping Channel ஆகிய இரண்டிலும் உயரங்களில் விற்று, bottom புள்ளிகளில் வாங்கியும் bottom புள்ளிகளில் வாங்கி உயரங்களில் விற்பதையும் தவிர்ப்பதினால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாம், இது ஒரு பாதுகாப்பிற்க்காக தான் சொல்கிறேனே தவிர நல்ல பயிற்சி ஏற்பட்ட பின்பு எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம், அதே நேரம் Normal Channel அமைப்பில் நாம் முன்னர் பார்த்தது போல எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம்,, சரி இந்த படத்தையும் பாருங்கள்,

இன்னும் ஒரு சில பதிவுகளில் நமது பயில்வோம் பங்கு சந்தை தொடர் நிறைவு பெரும் என்று நினைக்கின்றேன்.
வெள்ளி, 25 ஜூலை, 2014
25

கடந்த வாரம் Head & Shoulder பற்றி பார்த்தோம், இந்த வாரம் அடுத்த வடிவங்களை பற்றி பார்ப்போம், அந்த வகையில் இந்த வாரம் Triangle Pattern பற்றி பார்ப்போம்.
TRIANGLE PATTERN
Chart படங்களில் முக்கோணம் போன்ற அமைப்புகள் உருவாகும் பொழுது ஏற்படும் விளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம், பொதுவாக இது போன்ற அமைப்புகள் chart படங்களில் எந்த விதமான இடங்களிலும் ஏற்படலாம், அதாவது பங்குகளின் நகர்வுகளுக்கு முந்தய நிலையில் இருக்கும் வடிவங்களை Real Pattern என்றும், நகர்வுகளின் இடையே ஏற்படும் வடிவங்களை Consolidation Pattern என்றும் இரு வகைபடுத்தலாம்,
அந்த வகையில் இந்த Triangle என்ற வடிவம் மேற்கண்ட இரு இடங்களிலும் ஏற்படலாம், எந்த இடங்களில் ஏற்பட்டாலும் இந்த வடிவத்துக்கு அதிக பலம் என்பது மட்டும் நிச்சயம், உதாரணமாக நமது ஜாதக கட்டங்களில் நல்ல இடத்துக்கு உரிய கிரகங்கள் கேந்திர கோணங்களில் உச்சமாகும் போது ஏற்படும் பலம் இந்த அமைப்பிற்கு எப்பொழுதும் உண்டு,
மேலும் இந்த வடிவம் நமது chart படங்களில் எவளவு சிறியதாக இருந்தாலும் அதற்குரிய பலனை விரைவாக தரும் என்பது எனது அனுபவம், ஆனால் வடிவங்களின் break out புள்ளிகளை மிகச்சரியாக கண்டுபிடித்து செயலாற்ற வேண்டும், அப்பொழுது தான் சரியான வர்த்தகத்தை நாம் செயல்படுத்த முடியும்,
இன்னும் சொல்லபோனால் இந்த Triangle அமைப்பை பொறுத்தவரை அந்த கஷ்டம் கூட நமக்கு இருக்காது என்பதும் உண்மையே, இந்த அமைப்பை நாம் கண்டு கொள்வதும் எளிதானதே, மேலும் இந்த அமைப்பின் s/l கூட மிக அருகில் கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படும், மொத்தத்தில் இந்த வடிவம் அதிக பட்ச நம்பிக்கைக்கு உரிய! சற்று பாதுகாப்பு அதிகமான! இலக்குகளை துல்லியமாக கொடுக்கும் வடிவம் என்று சொன்னால் மிகையாகாது,
சரி இந்த வடிவத்தை பற்றி இன்னும் சில விசயங்களை பார்ப்போம், அதாவது இந்த வடிவம் முக்கோண வடிவம் என்று சொன்னாலும், சொல்லி வைத்தார் போல் நமது மனதில் இருக்கும் முக்கோண வடிவத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று இல்லை, நாம் முன்னரே பார்த்தோம் இல்லையா அதாவது இயற்கையாக ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மாற்று கோணம் கொண்டு பார்ப்பதற்கும் அநேக வித்தியாசம் உண்டு என்று,
இதே போல் தான் chart படங்களில் ஏற்படும் வடிவங்கள் எப்பொழுது சொல்லி வைத்தார் போல் இருக்காது, அந்த வடிவங்களை கண்டு அதன் break out புள்ளியை தேர்ந்தேடுப்பதற்க்குள் அநேக கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டி வரும், மேலும் இதனை சற்று எளிமைபடுத்திட! சற்று தெளிவுபடுத்திட கடந்த பாகங்களில் வித்தியாசமான படங்களை உங்களுக்கு கொடுத்து சிறு பயிற்ச்சியும் அளித்தோம், அந்த பயிற்சி இது போன்ற தருணங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்,
மேலும் எனது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொடர் பயிற்ச்சிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்புகள் முடிந்து மூன்று மாதத்திற்கு அடுத்த நாள் எந்த பங்குகள் உயரலாம், அந்த பங்குகள் உயர்வதற்கு என்ன விதமான வடிவங்கள் காரணமாக இருக்கிறது என்பதினை chart படங்களுடன் அனைவரது மின் அஞ்சலுக்கும் தினமும் மாலை அனுப்பி வைக்கின்றோம்,
இவ்வாறு செய்யும் போது நமது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களை அறியாமலேயே இந்த chart படங்களில் இந்த வடிவம் ஏற்படுகிறது ஒரு chart படத்தை பார்க்கும் போது இதில் இந்த வடிவம் புதைந்துள்ளது என்ற பயிற்ச்சியும் அனிச்சை செயலாக வந்துவிடும், இதற்காக தான் இந்த பயிற்ச்சியை நாங்கள் அளிக்கின்றோம், இந்த பதிவுகளை படிப்பவர்கள் இது மாதிரியான பயிற்ச்சியை மேற்கொள்வது முக்கியம், சித்திரமும் கைபழக்கம் என்ற பழமொழி இதற்க்கு சால பொருந்தும், ஆகவே பயிற்சி செய்யுங்கள், சரி இந்த முக்கோண வடிவம் பல வகைகளில் ஏற்படும் அதாவது
எப்பொழுதும் போல் உள்ள முக்கோணம்,
சற்று சாய்ந்து கீழே நோக்கி நிற்கும் முக்கோணம்,
சற்று உயர்ந்து மேல் நோக்கி நிற்கும் முக்கோணம்,
அனைத்திற்கும் மேலாக ஒரு மாதிரி இது முக்கோணமா இல்லை வேறு ஏதுமா என்ற என்னத்தை கொடுக்கும் முக்கோணம்
என்று வகைபடுத்தலாம், எது எப்படி ஆனாலும், அப்படி இப்படி என்று இருந்தாலும் பரவாயில்லை முக்கோணத்தின் சற்றேறக்குறைய உருவங்கள் வந்து விட்டாலே அது முக்கோணம் தான் break out கிடைத்தவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான், போதிய பயிற்சி ஏற்பட்டவுடன் உங்களுக்கு எளிமையாக புரிந்துவிடும் கவலைபடாதீர்கள்,
இவைகளை எல்லாம் எனது அநுபவத்தி நான் கண்ட உண்மைகள், பங்கு சந்தைகளில் ஏட்டு சுரைக்காய் என்றும் உதவாது, ஆகவே நான் இங்கு உங்களுக்கு தருவதெல்லாம் எனது அனுபவங்கள், அதிலும் வெற்றிகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அனுபவங்கள், ஆகவே சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், இலவசமாக கிடைப்பதால் மேம்போக்காக சென்று விடாதீர்கள், என்னால் முடிந்த வரை எவளவு எளிமைபடுத்தி தர முடியுமோ அவளவு எளிமைபடுத்தி தந்துள்ளேன், ஆகவே கவனமாகவே படியுங்கள்,
சரி இந்த முக்கோணத்தின் இலக்குகளை நாம் எப்படி கண்டறிவது, பொதுவாக முக்கோண அமைப்பின் உயரம் தான் அந்த அமைப்பு break out பெறும்போது அதன் இலக்காக இருக்கும், இதன் s/l ஆக அந்த முக்கோணத்தின் support கோடு எந்த புள்ளியில் வருகிறது அந்த புள்ளி s/l ஆக செயல் படும்,
சரி இந்த அமைப்பின் படங்களை பாருங்கள்:

இந்தத் தொடரை எழுதி வருகின்றார்
வியாழன், 24 ஜூலை, 2014
24
கடந்த வாரம் Head Shoulder பற்றி ஆரம்பித்து இருந்தோம் இல்லையா, இந்த வாரம் இதனை பற்றி சற்று முழுமையாக பார்ப்போம்.
கடந்த வாரத்தில் இந்த Head Shoulder இல் இரண்டு வகைகள் உண்டு என்றும், அவைகள் முறையே Normal HnS, மற்றும் Inverted HnS என்றும் பார்த்தோம்,
மேலும் இதன் உள்ளே மேலும் சில உருவங்கள் உண்டு என்றும் பார்த்தோம் இல்லையா அவைகளை பற்றி இப்பொழுது பார்ப்போம், அதற்க்கு முன் இது போன்ற வடிவங்கள் ஏற்படும் பொழுது எப்படி இந்த அமைப்பின் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பார்த்தோம், இப்பொழுது இந்த அமைப்பின் உள்ளே உள்ள மேலும் சில உள் அமைப்புகளை பற்றி பார்ப்போம்
HEAD & SHOULDER இல் உள்ள வகைகள்
இந்த அமைப்பில் மூன்று விதமான வடிவங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அவைகள் முறையே Normal HnS, Raising HnS, Sloping HnS,
NORMAL HNS
பொதுவாக normal HnS என்ற வடிவம் ஒரு குறிப்பிட்ட பங்கில் ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட பங்கு தொடர்ந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட போகிறது என்பதினை நமக்கு உணர்த்தும், இதன் தொடர்ச்சியாக அந்த வடிவத்தின் Neck line எனப்படும் break down point உடைபட்டவுடன் கீழே இறங்க ஆரம்பிக்கும்,
இவ்வாறு இறங்கும் போது அதன் முதல் இலக்காக கடைசியாக ஏற்பட்ட shoulder இன் உயரம் இருக்கும், பிறகு head இன் உயரம் அடுத்த இலக்காக இருக்கும், இதன் s/l ஆக இறுதியாக ஏற்ப்பட்ட shoulder இன் top point செயல்படும், s/l ஐ கடைபிடிப்பது ஒரு வகையான கலை! அதற்க்கு வேறு சில முறைகளையும் நாம் பயன்படுத்தலாம்,
RAISING HNS
இந்த வடிவமும் இறங்கு முகத்தையே நமக்கு உணர்த்தும்! அதே நேரம் normal HnS ஓரளவிற்கு தெளிவாக தனது வடிவத்தை காட்டும், ஆனால் இந்த raising HnS இல் இது போன்ற தெளிவான வடிவமைப்புகள் நமக்கு எப்பொழுதும் கிடைக்காது, அதே நேரம் இந்து போன்ற வடிவம் ஏற்பட்டு neck line எனப்படும் break down point உடைபட்டால் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும், இலக்குகள் முன்னர் பார்த்த முறையில் தான் கணக்கிடப்பட வேண்டும், Raising HnS என்பது ஒரு 120 to 150 என்ற டிகிரி கோணத்தில் chart படங்களில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
SLOPING HNS,
இந்த வடிவமும் இறங்கு முகத்தையே நமக்கு உணர்த்தும் அதே நேரம் சற்று கீழிறங்கி சாய்வாக இந்த வடிவம் ஏற்படும், அதாவது ஒரு 230 to 250 டிகிரி என்ற கோணத்தில் இந்த வடிவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் , இது போன்ற வடிவம் ஏற்பட்டு neck line எனப்படும் break down point உடைபட்டால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம்,
இலக்குகள் முன்னர் பார்த்த முறையில் தான் கணக்கிடப்பட வேண்டும், இந்த sloping HnS இல் நெக் லைன் உடைபட்டவுடன் sell பண்ணுவதற்கும் முன் அநேக விசயங்களை சரி பார்க்க வேண்டும், ஏனெனில் இந்த வடிவம் நம்மை ஏமாற்றும் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாகவே HnS அமைப்புகள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் இது போன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினாலேயே இதில் அதிக வில்லங்கங்களும் நிறைந்து இருக்கும், அதாவது எந்த பொருளுக்கு demand அதிகம் இருக்கோ அந்த பொருளுக்கு எப்பொழுது ஒரு duplicate இருக்கும் இல்லையா அதே போல் தான், சற்று நிதானமாக அனைத்து விசயங்களையும் சரி பார்த்து சரியான முடிவுக்கு வர வேண்டும்,
மேலும் இதில் neck line எனப்படும் break down point உடைபட்டவுடன் சற்று இறக்கம் ஏற்பட்டு பிறகு இந்த break down உண்மையானது தானா! சக்தி வாய்ந்தது தானா! என்று பரிசோதிக்க மறுபடியும் மேலேற்றி சோதனை செய்யும் வாய்ப்புகள் எப்பொழுது உண்டு, ஆகவே தெளிவாக செயல்படவேண்டும்,
மேலும் பொதுவாகவே பங்கு சந்தைகளில் ஒரு விஷயம் உண்டு அதாவது அனைவருக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டால் அந்த விஷயம் எதிர்மறையாகவே நடைபெறும் என்று, இதை போலவே இந்த அமைப்பு HnS என்று அனைவரும் உறுதி செய்துவிட்டால் அதில் அநேக பிரச்சனைகள் ஏற்படும்! மிரட்டல் உருட்டல் எல்லாம் நடந்து அனைவரையும் பயமுறுத்தி ஒரு வழி செய்து பிறகு தான் தனது இலக்கை அடையும்,
மேலும் இந்த மிரட்டல் உருட்டல் நேரங்களில் அநேகம் பேர் தங்களது நிலைகளில் இருந்து வெளியேறும் நிகழ்வுகளும் நடக்கும் (அரசியல இது எல்லாம் சகஜம் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்) ஆகவே எச்சரிக்கை எப்பொழுதும் தேவை, பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது என்பது போர்க்களத்தில் நிற்பது போல! கரணம் தப்பினால் மரணம் தான், எச்சரிக்கையாக இருந்தால் அநேக பரிசுகள் உங்களுக்காக எப்பொழுதும் காத்து இருக்கும்...
INVERTED HNS
இது Normal HnS க்கு அப்படியே எதிர்பதமானது, அதாவது இது போன்ற அமைப்புகள் ஏற்படும் போது அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு அந்த பங்கு தயாராகி வருகிறது என்றே கொள்ளவேண்டும், மேலும் முன்னர பார்த்த முறையில் தான் இதற்க்கான இலக்குகளும் நிர்ணயிக்கப்படும், neck line எனப்படும் break out point உடைபட்டவுடன் தொடர் உயர்வுகள் ஏற்படத்தொடங்கும், அதே நேரம் முன்னர் பார்த்தது போல இந்த break out சக்தி வாய்ந்ததா என்று உறுதி செய்துகொள்ள சற்று கீழே இறங்கவும் வாய்ப்புகள் உண்டு,
இந்த முறையிலும் முன்னர் பார்த்த அதே போன்ற வகைகள் உண்டு Normal inverted HnS, Raising inverted HnS, Sloping inverted HnS, இவைகளை பற்றி பார்ப்போம்
NORMAL INVERTED HNS
இது ஒரு மனிதனின் தலை மற்றும் தோள் பட்டைகளின் வடிவம் போல் தான் இருக்கும், இருந்தாலும் இது தலைகீழ் உருவம் போல் தோற்றம் அளிக்கும் ஆதலால் இதற்க்கு இந்த பெயர் ஏற்பட்டது, இதனை பொறுத்தவரை உயர்வுக்கான ஏற்பாடு என்று கொள்ளலாம், neckline உடைபட்டவுடன் தொடர் உயர்வுகள் ஏற்படத்தொடங்கும், மற்றபடி முன்னர் பார்த்த normal HnS ஐ போன்றது தான் இதுவும், புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை,
RAISING INVERTED HNS
இதுவும் raising HnS ஐ போன்றது தான் ஆனால் இது தொடர்ந்து உயர்வதற்கான வடிவம், மேலும் இந்த வடிவத்தில் break out பெற்றவுடன் buy செய்வதற்கு முன் அனைத்து சாத்தியக்கூறுகளும் சாதகமாக உள்ளதா என்று பார்த்து பின்பு முடிவு எடுக்க வேண்டும், ஏனெனில் இதில் ஏமாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் சற்று உண்டு, இது பொதுவில் ஒரு 120 to 150 என்ற டிகிரி கோணத்தில் chart படங்களில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
SLOPING INVERTED HNS
இதுவும் sloping HnS ஐ போன்றது தான், ஆனால் இது தொடர்ந்து உயர்வதற்கான வடிவம், மேலும் இது சற்று இறங்கி சாய்வாக இருக்கும் மேலும் ஒரு 230 to 250 டிகிரி என்ற கோணத்தில் இந்த வடிவம் chart ல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம், இந்த வடிவம் ஏற்பட்டு neckline உடைபட்டால் நல்ல உயர்வுகள் விரைவாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்,
இத்துடன் HEAD & SHOULDER என்ற வடிவத்தின் விளக்கங்கள் முடிந்தது, சரி கீழே உள்ள படங்களை பாருங்கள், அடுத்த வடிவங்களை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
படங்கள்
PICTURE 1 NORMAL HEAD & SHOULDER

PICTURE 2 NORMAL RAISING HEAD & SHOULDER

PICTURE 3 NORMAL SLOPING HEAD & SHOULDER

PICTURE 4 INVERTED HEAD & SHOULDER

PICTURE 5 INVERTED RAISING HEAD & SHOULDER

PICTURE 6 INVERTED SLOPING HEAD & SHOULDER

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)