மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 4 மே, 2015

ஆன்லைன் ஃபாரக்ஸ் டிரேடிங்.....




அண்மைக் காலமாக இந்தியாவில் ஆன்லைன் ஃபாரக்ஸ் டிரேடிங் அதிகரித்து வருகிறது. காரணம், அவர்கள் உத்தரவாத வருமானம் தருவதாக சொல்வது இருக்கிறது. இந்த ஆன்லைன் ஃபாரக்ஸ் டிரேடிங் நிறுவனங்கள் இன்டர்நெட் அல்லது எலெக்ட்ரானிக் டிரேங்க் போர்டல்கள் மூலம் இயங்குவதால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியவில்லை.

பெரும்பாலும், இந்த ஃபாரக்ஸ் டிரேடிங் கம்பெனிகள் வெளிநாடுகளை ஆர்ஜினாக கொண்டவையாக இருக்கின்றன.  இதில் பணம் போட்டுவிட்டு ஏமாறுகிறவர்கள் மற்றும் மூலதனத்தை இழந்து நஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டு இருக்கிறது. இதற்கு மக்களின் பேராசையும் ஒரு காரணமாக இருக்கிறது. மாதத்துக்கு 15&20 சதவிகித வருமானத்துக்கு உத்தரவாதம் தருகிறோம். அதனை முன் கூட்டியே காசோலையாக தந்துவிடுகிறோம். மேலும், பாண்ட் பத்திரம் எழுதி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி லட்சக் கணக்கான ரூபாயை முதலீடு செய்ய வைத்து விடுகிறார்கள். பிறகு ஒரு நாள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுகின்றன, இந்த ஆன்லைன் ஃபாரக்ஸ் டிரேடிங் நிறுவனங்கள். மக்களுக்கு எத்தனை முறை ஏமாந்தாலும் எச்சரிக்கையாக இருப்பதில்லை. 

இந்நிலையில ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்.பி.ஐ.) இந்தியாவிலுள்ள வங்கிகளை எச்சரிக்கைப்படுத்தி இருக்கிறது. ஃபாரக்ஸ் டிடேடிங், மார்ஜின் மணிக்காக பொது மக்கள் கிரெடிட் கார்ட் அல்லது டெபாசிட் கணக்கு ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு, இந்த டிரேடிங்கில் உள்ள விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவது அல்லது வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவது ஃபெமா (அந்நிய செலாவாணி) சட்டப்படி தப்பு என்பதையும் விளக்கி சொல்ல வேண்டும். இந்த பண பரிமாற்றங்கள் ஆர்.பி.ஐ. அனுமதியுடன் நடந்தால் மட்டுமே செல்லும் என்பதையும் சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. .