மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?



"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம்தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக
அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?

- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

தினம் வரும் பணம்



இன்றைய பரபரப்பான வேகமான உலகில் எவ்வளவு வருமானம் வந்ததாலும் பற்றாக்குறையாகவே  பலருக்கும் உள்ளது. ஆகவே ஏதேனும் கூடுதல் வருமானம் தேடி பலரும் அலைவதுண்டு. வழி தெரியாமல் விழிப்பதுண்டு. இதோ உங்களுக்காகவே ஓர் அரிய
வாய்ப்பு.

 தகுதி: +2 , டிகிரி, டிப்ளமா மற்றும் இன்டர்நெட்டில் இ-மெயில் அனுப்ப தெரிந்திருத்தல் அவசியம்.

தேவை: ஒரு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்பு 256 KPBS இருந்தால் கூட போதுமானது.

 இ - மெயில் - க்கான மெசேஜ் கொடுத்துவிடுவார்கள். ஒரு இ - மெயில் மெசேஜ் மற்றும் ஒரு SMS - க்கு ரூபாய் 2 கொடுக்கிறார்கள். இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் பொருத்தமானது.

 பணத்தை ஆன்லைன் மூலமாக உங்கள் வங்கி கணகிட்கு அனுப்புவார்கள். அல்லது டிடி / செக் / மணியார்டர் வசதியும் உண்டு. ஆனால் அதற்கான கட்டணம் உங்களை சார்ந்தது. மாதம் ஒரு முறை உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கும் திட்டங்களைப்ப் பொறுத்து / உங்கள் வேலை திறனைப் பொறுத்து  உங்கள் வருமானம் அமையும். குறைந்த பட்ச டெப்பாசிட் தொகை பெறுவார்கள்.  தேர்ந்தெடுக்கும் திட்டங்களைப்ப் பொறுத்து இந்த தொகை மாறுபடுகிறது. 

மேலும் இது பற்றிய விபரங்களுக்கு இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டோ அல்லது இவர்களின் வெப்சைட் மூலமாகவோ அறிந்து கொண்டு உடனே உங்கள் வருமானத்தை பெருக்குங்கள். 

மீண்டும் சொல்லுகிறோம் இது மிகவும் எளிய வேலை மட்டுமே. உங்கள் வாய்ப்பை தவற விட வேண்டாம். குறைந்த பட்ச ஆட்களை மட்டுமே பணியமர்த்துகிறார்கள். ஆகவே உடனே தொடர்பு கொண்டு விடுங்கள். உங்கள் வருமானம் நூறு சதவீதம் நிச்சயம். 

தொலைபேசி: 0-7305847197
வெப்சைட்டிற்கு செல்ல: www.onlinedataproject.blogspot.in

சனி, 5 ஏப்ரல், 2014

பங்கு சந்தை CANDLE STICK Technical Analysis - பாகம்1 CANDLE STICK ஒரு அறிமுகம்





உருவாகும் விதம்



CANDLE என்பது ஒரு குறிபிட்ட நேர அளவுகளில் ஏற்படும் துவக்கவிலை, அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை, முடிவு விலை இந்த நான்கு விலைகளை கொண்டு ஒரு CANDLE ஆனது உருவாகின்றது. இவற்றிற்கான நேர அளவுகள் 1 நிமிடம், 5 நிமிடம், என்று ஆரம்பித்து ஒரு வருடத்திற்கான CANDLE கூட வரைய முடியும்.



உதாரணப் படம்



மேலே உள்ள படத்தில் ஒரு ஏறும் CANDLE வரையப்பட்டுள்ளது. இதில் CANDLEன் ஆரம்பவிலை, குறைந்தப்பட்சவிலை, அதிகபட்சவிலை, முடிவுவிலை ஆகியவைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இதில் வெள்ளையாக உள்ள பகுதி CANDLEன் உடல் பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த உடல் பகுதியானது மிகவும் முக்கியமானது. இந்த உடல் பகுதி உருவாகும் விதத்தை கொண்டுதான் CANDLEன் அடுத்த Market Momentஐ பற்றி அறிந்துக் கொள்ள முடியும். அதை பற்றி வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம்.



உதாரணப் படம் - 1 வெள்ளை நிறம்



உதாரண படம் 2 - பச்சை நிறம்



மேலே உள்ள படத்தில் உள்ளவாறு உடல் பகுதியானது வெள்ளை நிறத்தில் இருந்தால் அந்த பங்கானது கீழே Open ஆகி மேல் நோக்கி சென்று தொடந்து மேலேயே முடிந்து இருப்பதால் உடலானது வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளது. இதை Bullish CANDLE என்று அழைப்பர். தற்பொழுதைய காலகட்டத்தில் வெள்ளைக்கு பதிலாக பச்சை அல்லது நீல நிறங்களை பயன்படுத்துகிறார்கள்.



உதாரணப் படம்






மேலே உள்ள படத்திற்கு மாற்றாக CANDLE ஆனது கருப்பு நிறத்தில் இருந்தால் அந்த பங்கானது மேலே Open ஆகி தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் கீழே இறங்குவதால் ஏற்படுகின்றது. இதை Bearish CANDLE என்று கூறுவர். தற்பொழுது கருப்பு நிறம் மட்டும் அல்லாமல் சிவப்பு நிறத்தையும் இதற்கு பயன்படுத்துகின்றன்ர்.



உதாரணப் படம்






இதுவரை Bullish CANDLE, Bearish CANDLE என்றால் என்ன. அவற்றின் உருவ அமைப்பு போன்றவற்றை பார்த்தோம். இனி இந்த CANDLEகளில் வரும் உருவங்கள் அவற்றால் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.


முதலில் நாம் பார்க்க இருப்பது HAMMER எனப்படும் CANDLE.

இவை பார்ப்பதற்கு ஒரு சுத்தியல் போன்ற வடிவத்தில் இருக்கும். அதனால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மேலே உள்ள படத்தை பார்த்தால் தெரியும் CANDLEன் உடல் பகுதி சிறியதாக இருப்பது. இப்படி சிறியதாக இருப்பதன் அர்த்தம் இந்த CANDLEல் வாங்குபவர்களாலும் சந்தையை தொடர்ந்து மேலே கொண்டு செல்ல முடியவில்லை, விற்பவர்களாலும் சந்தையை தொடர்ந்து இறக்க முடியாமல் ஒரு குழப்பமான நிலையில் மட்டுமே இது போன்ற அமைப்பு உருவாகும்.


இவ்வாறு உருவாகும் போது அடுத்த CANDLE ஆனது HAMMER CANDLEன் Highஐ கடந்து மேலே சென்றால் தொடர்ந்து மேலே செல்லும். அது எதுவரை செல்லும் என்றால் அந்த HAMMER CANDLEன் மொத்தம் உயர அளவிற்கு உடனடியாக செல்லும். அதுமட்டும் அல்லாமல் அவை தொடர்ந்து மேலே செல்லும். அதே சமயம் சந்தையானது HAMMER CANDLEன் Lowஐ உடைத்தி கீழே சென்றால் அதை விற்க கூடாது. சந்தை இறக்கத்தை கண்டறிய வேறு ஒரு HAMMER CANDLE Pattern உள்ளது. இந்த HAMMER CANDLE ஆனது சந்தையின் இறக்கத்தின் முடிவில் வந்தால் நன்றாக மேலே ஏறும்.


இறக்கத்தை கண்டறிய உதவும் HAMMER CANDLE.






மேலே உள்ள படத்தில் உள்ளவாறு HAMMER CANDLE ஆனது வந்தால் அது சந்தையின் இறக்கத்தை கண்டறிய உதவும். இவ்வாறு வரும் போது அந்த CANDLEன் Lowஐ உடைத்துக் கொண்டு கீழே சென்றால் தொடர்ந்து கீழே செல்லும். இதிலும் அந்த CANDLEன் உயரம் உடனடியாக கீழே இறங்கும். இவை சந்தையின் ஏற்றத்துன் முடிவில் வந்தால் அவை சிறப்பாக இறங்கும்.


மேலே கூறிய இரண்டு HAMMER CANDLEகளும் சந்தையின் போக்கை மாற்றும் வகையில் அமைந்திருப்பதால் இதை TREND REVERCEL CANDLE என்றும் அழைப்பர். மேலும் இரண்டு வகைகளிலும் HAMMER CANDLE ஆனது Bullish [or] Beraish CANDLE இவற்றில் எது வேண்டுமானாலும் வரலாம். அதாவது CANDLE ஆனது பச்சை நிறத்திலும் இருக்கலாம் அல்லது சிவப்பு நிறத்திலும் இருக்கலாம் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. CANDLEன் வடிவம் பார்ப்பதற்கு HAMMER போன்று இருக்க வேண்டும்.


இத்துடன் HAMMER CANDLE பற்றிய வகுப்பு முடிந்தது. அடுத்த வாரம் வேறு ஒரு CANDLE பற்றி பார்ப்போம்.


இவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
HAMMER CANDLE பங்கு சந்தையில் வந்த இடங்கள், அவற்றில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து தனி பதிவு இடம் பெறும்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பங்கு சந்தை CANDLE STICK Technical Analysis




CANDLE STICK தொழில்நுட்பம் பற்றி எழுதலாமா என்று கேட்டதற்கு இருவர் பின்னூட்டத்திலும், மூவர் Mailலிலும் எழுத வேண்டும் என்றும் கேட்டிருந்தனர். இந்த ஐவருக்குகாக மட்டும் நான் எழுத வில்லை. இந்த வலைப்பூவிற்கு வரும் அனைவருக்காகவும் எழுதுகிறேன். ஆனால் இந்த தொடரை அந்த ஐவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இதன் மூலம் ஒருவராவது பலன் பெற்றால் அதுவே எனக்கு மனநிறைவை அளிக்கும்.



Candle Stick பற்றி பார்ப்பதற்கு முன்னால் Graph பற்றி சிறிது பார்ப்போம்.



பொதுவாக Technical Analysisற்கு பெரும்பாலானோர் Graph என்ப்படும் வரைபடங்களையே பயன்படுத்துகின்றனர். நாம் Candle Sticks பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் முதலில் வரைபடங்கள், அதன் வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்.



Graph என்பது பங்கு சந்தையை வெளியிலிருந்து பார்ப்பது போல் ஆகும். அதாவது நாம் ஒரு பங்கை வாங்கி வைத்துக் கொண்டு அதற்காக Graph பார்ப்பதற்கும், எந்த வித positionம் இல்லாமல் பொதுவாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்படி பொதுவாக பார்க்கும் பொழுதுதான் அந்த Graphன் உண்மைத் தன்மையை அறிய முடியும். இது எப்படி என்றால் ஒரு இருதய நோயாளிக்கு ECG எதற்காக எடுக்கின்றார்கள்? ECGயில் வருவது என்ன? அதுவும் ஒரு Graphதானே. வெறும் Paperல் இருக்கும் Graphஐ வைத்துக் கொண்டு இருதய பலம் எவ்வாறு இருக்கின்றது என்பதை கூறமுடியும்? அந்த Graphல் இருக்க கூடிய கோடுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை பொறுத்தே மருத்துவர் இருதயத்தை பற்றி ஒரு முடிவிற்கு வருகின்றார். அதேபோல்தான் பங்குசந்தை Graphல் வரும் கோடுகளை கொன்று பங்குசந்தை வலுவானதாக இருக்கிறதா இல்லையா என்பதை முடிவிற்கு வர இயலும்.



புதிதாக மருத்துவபடிப்பு முடித்த ஒரு இளம் மருத்துவரிடம் ஒரு ECG Reportஐ கொடுத்து இருதயமானது எப்படி இருக்கின்றது என்று கேட்டால் பதில் கூற திணறிதான் போவார். ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த மருத்துவர் அந்த ECGஐ பார்த்தவுடன் இருதயம் எப்படி இருக்கின்றது என்று ஒரு முடிவிற்கு உடனே வந்து விடுவார். அப்படி பதில் கூறமுடியாமல் போன அந்த இளம் மருத்துவர் படித்த 5 1/2 வருட படிப்பு வீண் என்று கூற முடியுமா. நிச்சியமாக முடியாது. அவரால் பதில் கூற முடியாமல் போனதற்கான காரணம் அனுபவமின்மை, புதிதாக பார்ப்பதால் ஏற்படும் பதற்றம் போன்றவையே காரணம் ஆகும். ஆனால் பழகபழக சரி ஆகிவிடும். 5 1/2 வருடம் படித்த மருத்துவருக்கே இப்படி என்றால், புதிதாக பங்குசந்தை Technical analysis படிக்க இருக்கும் நாம் படிக்கும் போது சிறு குழப்பங்கள் வரலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம்.



பெரும்பாலான Technical analysis தோல்வி அடைவதற்கான காரணம் அதை உடனே செயல்படுத்தும் போதுதான். ஒரு மருத்துவ மாணவரின் 5 1/2 வருட படிக்கும் காலத்தில் கடைசி வருடத்தின் போதுதான் ஊசி போடவே விடுவார்கள். எதற்காக இந்த 4 வருட காலம் என்றால் ஊசி போடுவதற்கு முன் கற்று கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. அதே போல்தான் இதுவும், ஒரு Techniqueஐ கற்று கொண்டு செயல்படுத்துவதற்கு முன்னர் நன்கு பழக வேண்டும். அப்பொழுதுதான் அதைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்தால் Technical Failure என்பது இருக்காது.



Graphல் எனக்கு தெரிந்த வகைகள்.

i) Line Graph

ii) Bar Graph

iii) Candle Stick Graph

இந்த அறிமுக வகுப்பு இத்துடன் முடிவுற்றது.



வரும் வாரங்களில் Candle Stick பற்றி விரிவாக எழுதப் படும்.

வியாழன், 3 ஏப்ரல், 2014

CANDLESTICK CUP PATTERN













போன பகுதியில் வாங்க Cup Coffee சாப்பிடலாம் - பகுதி1 அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.





சென்ற பகுதியில் இந்த Techniqueஐ பயன்படுத்தி சந்தை எப்படி மேலே செல்லும் என்று பார்த்தோம்.





இந்த பகுதியில் இதே Techniqueஐ பயன்படுத்தி சந்தை எவ்வாறு கீழே இறங்குகின்றது என்பதை பார்க்கலாம். இந்த முறைக்கு Reverce Cup & Handle என்று பெயர்.
இந்த முறையில் வரைபடமானது ஒரு Coffee cupஐ தலைகீழாக கவிழ்த்து வைத்தால் என்ன தோற்றதில் இருக்குமோ அப்படி பார்வைக்கு இருக்கும்.



வரைபடத்தில் Cupல் ஆரம்பித்து Handle முடியும் போது ஒரு கற்பனையான Line உருவாகும். இதற்கு Neckline என்று பெயர். பெரும்பான்மையானவர்கள் இந்த Necklineஐ கண்டறிவதில் தோற்றுவிடுவார்கள். இதை கண்டறிவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். அதற்காக கண்டறிவது கடினம் என எண்ண வேண்டாம். பழக பழக கண்டறிவது எளிதாகிவிடும். அவ்வாறு கண்டறிந்துவிட்டால் இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிது.



வர்த்தகம் நடக்கும் போது இந்த Neckline Breake ஆகும் வரை wait செய்ய வேண்டும். Breake ஆன உடன் வர்த்தகம் செய்யலாம். வர்த்தகம் செய்யும் போது முதலில் Handleன் உயரத்திற்கும் பின்னர் Cupன் முழு உயரத்திற்கும் சந்தையானது இறங்கும். இங்கு நான் சந்தை என குறிபிடுவது எந்த பங்கில் இந்த Pattern வந்திருக்கிறதோ அதுவாகும்.



இந்த முறையில் Handle ஆனது Cupற்கு இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என எந்தபக்கம் வேண்டுமானாலும் வரலாம். பார்ப்பதற்கு ஒரு Cupன் உருவத்தை ஒத்து இருக்க வேண்டும்.



இந்த முறையில் பங்குசந்தையில் 16-03-2012 அன்று சந்தையில் இறங்கிய பங்குகளை பார்க்கலாம்.




முதலில் நாம் பார்க்க இருப்பது 10நிமிட BANKNIFTY March Future Contractன் வரைபடம். இதில் 10573 என்ற Neck line உடைந்த உடன் சந்தையானது தொடர்ந்து இறங்கி Handleன் முழு உயரத்தையும் அடைந்துள்ளது.




BANKNIFTY - 1 Graph










இரண்டவதாக நாம் பார்க்க இருப்பது 5 நிமிட PNB வரைபடம். இதில் Neckline ஆனது 990 ஆகும். இந்த Neckline ஆனது உடைந்த உடன் Handleன் முழு உயரத்தையும் அதாவது 969 என்ற நிலையை அடைந்துள்ளது.


PNB Graph








இங்கு நான் எழுதியவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது இதற்கு முன் இந்த முறையை தெரிந்து ஆனால் தோல்வி கண்டவர்கள் தங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

புதன், 2 ஏப்ரல், 2014


தினசரி வர்த்தகத்தில் நான் ப

யன்படுத்தும் தொழில்நுட்பங்கள்

நான் அதிகம் பயன்படுத்துவது Patterns என எல்லோராலும் அழைக்கப்படும் முறைகளை பயன்படுத்திவருகின்றேன். அவை
i) Head & Shoulder Pattern
ii) Cup & Handle Pattern
இன்று நாம் முதல் Patternஐ பற்றி விரிவாக பார்ப்போம்.

Head & Shoulder Pattern
இந்த Pattern ஆனது பார்ப்பதற்கு மனிதனின் தலை ம்ற்றும் தோள் போன்ற தோற்றதுடன் இருக்கும்.
உதாரணப் படம்:
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு Graphல் வந்தால் அதாவது இடதுபுறம் ஒரு தோள்பட்டை மாதிரியும் நடுவில் தலை போன்றும் வலதுபுறம் மற்றொரு தோள்பட்டை மாதிரியும் இருக்கும்.
இவ்வாறு வந்தால் அந்த பங்கு இறங்க தயாராகிவிட்டதாக அர்த்தம். இதில் நான் இதுவரை குறிபிடாத மற்றொரு முக்கியமான விஷயம் Neckline. அதாவது படத்தில் உள்ள Neckline Breake ஆனால் மட்டுமே சந்தை இறங்க ஆரம்பிக்கும். அதுவரை இந்த பங்கில் வர்த்தகம் செய்யக்கூடாது.
Neckline breake ஆனதற்கப்புறம் சந்தை எவ்வுளவு இறங்கும் என்றால் முதலில் அந்த shoulderன் அளவு இறங்கும், பின்னர் அந்த Headன் அளவு இறங்கும்.
இந்த Pattern ஆனது சந்தையின் உச்சத்தில் அதாவது நன்றாக ஏறி இருக்கும் போது வந்தால் சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இறங்கும் போது முழு அளவு வேகமாக இருக்காது.
இந்த Pattern ஆனது சந்தை இறங்குவதற்கு மட்டும் அல்ல, சந்தை ஏறுவதை கண்டுபிடிக்கவும் உதவும்.
இந்த முறைக்கு Reverce Head & Shoulder Pattern என்று பெயர்.
உதாரணப்படம்:
முந்தைய முற்றிலும் எதிர்மறையாக இருக்கும். இதிலும் சென்றமுறை போலவே Neckline breake ஆனால் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும். இந்த Neckline breake ஆனால் அந்த பங்கு ஏற ஆரம்பிக்கும். முதலில் shoulder அளவும் பின்னர் Head அளவும் ஏறும். 
இந்த Pattern சந்தையின் இறக்கத்தில் வந்தால் சிறப்பாக ஏறும்.
இந்த இரு முறைகளுக்கான Live Marketல் வந்துஉள்ள உதாரணங்கள் வேண்டுமானால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அது தனி பதிவாக வெளியிடப்படும்.
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தாலும் தெரு

CANDLESTICK CUP PATTERN 1




தினசரி வர்த்தகத்திற்கும் கப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறிர்களா? மிகப் பெரிய சம்மந்தம் உண்டு. சொல்லப்பொனால் என்னை பல முறை வர்த்தகத்தில் காப்பாற்றியது. அதனால் இதை எனக்கு மிகவும் பிடிக்கும்.





இன்று நாம் பார்க்கும் முறை Cup & Handle முறை

இந்த முறையானது வரைபடத்தில் பார்ப்பதற்கு ஒரு cup & handle வடிவத்தில் இருக்கும்.


உதாரணப்படம்:
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு வரைபடத்தில் வரவேண்டும். இவ்வாறு வரும் பொழுது சந்தை மேலே ஏறும் நிலையில் உள்ளது எனக் கொள்ளலாம். இந்த முறையிலும் Neckline உண்டு அதற்கான உதாரணப்படம் கீழே இணைத்துள்ளேன்.



மேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்த முறையில் Target ஆனது முதலில் Handleன் அளவும் பின்னர் 2வது Targetஆக Cupன் அளவாகவும் இருக்கும்.

கீழே உள்ள படமானது TATASTEELன் 13-03-2012 நேற்றைய 15 நிமிட வரைபடமாகும். இது 10 நாட்களுக்குறிய வரைபடமாகும்.




இந்த வரைபடத்தில் சிவப்பு நிற கோடுதான் Neckline ஆகும். அந்த Neckline Breake ஆனவுடன் TATASTEEL ஆனது மேலே சென்றுள்ளது. இன்றும் தொடர்ந்து மேலே சென்று Handleன் உயரத்தை அடைந்துள்ளது.


இந்த முறையானது மிகவும் எளிமையானது. கண்டுபிடிப்பதும் எளிது.


இந்த கட்டுரை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

Intraday Technique for Capital Market


தினசரி வர்த்தகத்தில் நான் ப

யன்படுத்தும் தொழில்நுட்பங்கள்

நான் அதிகம் பயன்படுத்துவது Patterns என எல்லோராலும் அழைக்கப்படும் முறைகளை பயன்படுத்திவருகின்றேன். அவை
i) Head & Shoulder Pattern
ii) Cup & Handle Pattern
இன்று நாம் முதல் Patternஐ பற்றி விரிவாக பார்ப்போம்.

Head & Shoulder Pattern
இந்த Pattern ஆனது பார்ப்பதற்கு மனிதனின் தலை ம்ற்றும் தோள் போன்ற தோற்றதுடன் இருக்கும்.
உதாரணப் படம்:
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு Graphல் வந்தால் அதாவது இடதுபுறம் ஒரு தோள்பட்டை மாதிரியும் நடுவில் தலை போன்றும் வலதுபுறம் மற்றொரு தோள்பட்டை மாதிரியும் இருக்கும்.
இவ்வாறு வந்தால் அந்த பங்கு இறங்க தயாராகிவிட்டதாக அர்த்தம். இதில் நான் இதுவரை குறிபிடாத மற்றொரு முக்கியமான விஷயம் Neckline. அதாவது படத்தில் உள்ள Neckline Breake ஆனால் மட்டுமே சந்தை இறங்க ஆரம்பிக்கும். அதுவரை இந்த பங்கில் வர்த்தகம் செய்யக்கூடாது.
Neckline breake ஆனதற்கப்புறம் சந்தை எவ்வுளவு இறங்கும் என்றால் முதலில் அந்த shoulderன் அளவு இறங்கும், பின்னர் அந்த Headன் அளவு இறங்கும்.
இந்த Pattern ஆனது சந்தையின் உச்சத்தில் அதாவது நன்றாக ஏறி இருக்கும் போது வந்தால் சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இறங்கும் போது முழு அளவு வேகமாக இருக்காது.
இந்த Pattern ஆனது சந்தை இறங்குவதற்கு மட்டும் அல்ல, சந்தை ஏறுவதை கண்டுபிடிக்கவும் உதவும்.
இந்த முறைக்கு Reverce Head & Shoulder Pattern என்று பெயர்.
உதாரணப்படம்:
முந்தைய முற்றிலும் எதிர்மறையாக இருக்கும். இதிலும் சென்றமுறை போலவே Neckline breake ஆனால் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும். இந்த Neckline breake ஆனால் அந்த பங்கு ஏற ஆரம்பிக்கும். முதலில் shoulder அளவும் பின்னர் Head அளவும் ஏறும். 
இந்த Pattern சந்தையின் இறக்கத்தில் வந்தால் சிறப்பாக ஏறும்.
இந்த இரு முறைகளுக்கான Live Marketல் வந்துஉள்ள உதாரணங்கள் வேண்டுமானால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அது தனி பதிவாக வெளியிடப்படும்.
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தாலும் தெரு