CANDLE STICK தொழில்நுட்பம் பற்றி எழுதலாமா என்று கேட்டதற்கு இருவர் பின்னூட்டத்திலும், மூவர் Mailலிலும் எழுத வேண்டும் என்றும் கேட்டிருந்தனர். இந்த ஐவருக்குகாக மட்டும் நான் எழுத வில்லை. இந்த வலைப்பூவிற்கு வரும் அனைவருக்காகவும் எழுதுகிறேன். ஆனால் இந்த தொடரை அந்த ஐவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இதன் மூலம் ஒருவராவது பலன் பெற்றால் அதுவே எனக்கு மனநிறைவை அளிக்கும்.
Candle Stick பற்றி பார்ப்பதற்கு முன்னால் Graph பற்றி சிறிது பார்ப்போம்.
பொதுவாக Technical Analysisற்கு பெரும்பாலானோர் Graph என்ப்படும் வரைபடங்களையே பயன்படுத்துகின்றனர். நாம் Candle Sticks பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் முதலில் வரைபடங்கள், அதன் வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்.
Graph என்பது பங்கு சந்தையை வெளியிலிருந்து பார்ப்பது போல் ஆகும். அதாவது நாம் ஒரு பங்கை வாங்கி வைத்துக் கொண்டு அதற்காக Graph பார்ப்பதற்கும், எந்த வித positionம் இல்லாமல் பொதுவாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்படி பொதுவாக பார்க்கும் பொழுதுதான் அந்த Graphன் உண்மைத் தன்மையை அறிய முடியும். இது எப்படி என்றால் ஒரு இருதய நோயாளிக்கு ECG எதற்காக எடுக்கின்றார்கள்? ECGயில் வருவது என்ன? அதுவும் ஒரு Graphதானே. வெறும் Paperல் இருக்கும் Graphஐ வைத்துக் கொண்டு இருதய பலம் எவ்வாறு இருக்கின்றது என்பதை கூறமுடியும்? அந்த Graphல் இருக்க கூடிய கோடுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை பொறுத்தே மருத்துவர் இருதயத்தை பற்றி ஒரு முடிவிற்கு வருகின்றார். அதேபோல்தான் பங்குசந்தை Graphல் வரும் கோடுகளை கொன்று பங்குசந்தை வலுவானதாக இருக்கிறதா இல்லையா என்பதை முடிவிற்கு வர இயலும்.
புதிதாக மருத்துவபடிப்பு முடித்த ஒரு இளம் மருத்துவரிடம் ஒரு ECG Reportஐ கொடுத்து இருதயமானது எப்படி இருக்கின்றது என்று கேட்டால் பதில் கூற திணறிதான் போவார். ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த மருத்துவர் அந்த ECGஐ பார்த்தவுடன் இருதயம் எப்படி இருக்கின்றது என்று ஒரு முடிவிற்கு உடனே வந்து விடுவார். அப்படி பதில் கூறமுடியாமல் போன அந்த இளம் மருத்துவர் படித்த 5 1/2 வருட படிப்பு வீண் என்று கூற முடியுமா. நிச்சியமாக முடியாது. அவரால் பதில் கூற முடியாமல் போனதற்கான காரணம் அனுபவமின்மை, புதிதாக பார்ப்பதால் ஏற்படும் பதற்றம் போன்றவையே காரணம் ஆகும். ஆனால் பழகபழக சரி ஆகிவிடும். 5 1/2 வருடம் படித்த மருத்துவருக்கே இப்படி என்றால், புதிதாக பங்குசந்தை Technical analysis படிக்க இருக்கும் நாம் படிக்கும் போது சிறு குழப்பங்கள் வரலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம்.
பெரும்பாலான Technical analysis தோல்வி அடைவதற்கான காரணம் அதை உடனே செயல்படுத்தும் போதுதான். ஒரு மருத்துவ மாணவரின் 5 1/2 வருட படிக்கும் காலத்தில் கடைசி வருடத்தின் போதுதான் ஊசி போடவே விடுவார்கள். எதற்காக இந்த 4 வருட காலம் என்றால் ஊசி போடுவதற்கு முன் கற்று கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. அதே போல்தான் இதுவும், ஒரு Techniqueஐ கற்று கொண்டு செயல்படுத்துவதற்கு முன்னர் நன்கு பழக வேண்டும். அப்பொழுதுதான் அதைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்தால் Technical Failure என்பது இருக்காது.
Graphல் எனக்கு தெரிந்த வகைகள்.
i) Line Graph
ii) Bar Graph
iii) Candle Stick Graph
இந்த அறிமுக வகுப்பு இத்துடன் முடிவுற்றது.
வரும் வாரங்களில் Candle Stick பற்றி விரிவாக எழுதப் படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக