தினசரி வர்த்தகத்திற்கும் கப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறிர்களா? மிகப் பெரிய சம்மந்தம் உண்டு. சொல்லப்பொனால் என்னை பல முறை வர்த்தகத்தில் காப்பாற்றியது. அதனால் இதை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இன்று நாம் பார்க்கும் முறை Cup & Handle முறை
இந்த முறையானது வரைபடத்தில் பார்ப்பதற்கு ஒரு cup & handle வடிவத்தில் இருக்கும்.
உதாரணப்படம்:
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு வரைபடத்தில் வரவேண்டும். இவ்வாறு வரும் பொழுது சந்தை மேலே ஏறும் நிலையில் உள்ளது எனக் கொள்ளலாம். இந்த முறையிலும் Neckline உண்டு அதற்கான உதாரணப்படம் கீழே இணைத்துள்ளேன்.

மேலே உள்ள படத்தில் உள்ளவாறு வரைபடத்தில் வரவேண்டும். இவ்வாறு வரும் பொழுது சந்தை மேலே ஏறும் நிலையில் உள்ளது எனக் கொள்ளலாம். இந்த முறையிலும் Neckline உண்டு அதற்கான உதாரணப்படம் கீழே இணைத்துள்ளேன்.

மேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்த முறையில் Target ஆனது முதலில் Handleன் அளவும் பின்னர் 2வது Targetஆக Cupன் அளவாகவும் இருக்கும்.
கீழே உள்ள படமானது TATASTEELன் 13-03-2012 நேற்றைய 15 நிமிட வரைபடமாகும். இது 10 நாட்களுக்குறிய வரைபடமாகும்.
இந்த வரைபடத்தில் சிவப்பு நிற கோடுதான் Neckline ஆகும். அந்த Neckline Breake ஆனவுடன் TATASTEEL ஆனது மேலே சென்றுள்ளது. இன்றும் தொடர்ந்து மேலே சென்று Handleன் உயரத்தை அடைந்துள்ளது.
இந்த முறையானது மிகவும் எளிமையானது. கண்டுபிடிப்பதும் எளிது.
இந்த கட்டுரை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக