மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 31 மார்ச், 2014

பங்குசந்தை எனும் புதையல் 2


பங்குசந்தை என்பது பெரும்பாலான மக்களால் சூதாட்டம் போன்றே பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு சூதாடியாலும் நிலையான வருமானத்தை சூதாட்டம் மூலம் பெறமுடியாது. பங்குசந்தை என்பது சூதாடும் இடமும் அல்ல. முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் சந்தை என்னதான் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்களுடைய முதலீட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடாது.


முதலீட்டாளர்களை பங்குசந்தையில் மூன்று விதமாக பிரிக்கலாம்.

(i) நீண்ட கால முதலீட்டாளர்.
(ii) குறுகிய கால முதலீட்டாளர்.
(iii) தினசரி வர்த்தகர்.

நீண்டகால முதலீட்டாளர் சந்தையில் ஒரு தவறான முடிவு எடுத்தாலும் அவரால் தனது தவறை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.

குறுகிய கால முதலீட்டாளர், தினசரி வர்த்தகர்கள் சந்தையில் ஒரு தவறான முடிவு எடுத்தால் அவர்களின் இழப்பு விகிதம் அதிகமாக இருக்கும். ஏனேனில் இவர்களுக்கான முடிவு எடுக்கும் காலம் மிகவும் குறுகியதானதாகும். இதனாலயே அதிகமான இழப்புகள் ஏற்படுகின்றன.

அதனால் நாம் இந்த வலைப்பூவில் தினசரி மற்றும் குறுகிய கால வர்த்தகர்களை பற்றியே நமது வலைப்பூவின் முடிவுகள் இருக்கும்.

ஒரு தினசரி வர்த்தகர் எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை விட எதை செய்யாமல் இருந்தால் நம் பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்பதை தெரிந்து வைத்து இருந்தாலே போதுமானது.

இதிலும் ஒரு குழப்பம் என்னவென்றால் சந்தையில் எந்த Technique வைத்து வர்த்தகம் செய்வது என்பது. ஒரு நாள் Win  ஆகும் Technique மற்றொரு நாள் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகின்றது. 

இதற்கான எனது அனுபவ பதில் ஒரு நல்ல குத்து சண்டை வீரன் 1000 வீதமாக குத்த தெரிந்தவனை பார்த்து பயப்படமாட்டான். மாற்றாக ஒரு குத்தை 1000 முறைக்கு மேல் பழகியவனை பார்த்து பயப்படுவான். ஏனெனில் 1000 முறைக்கு மேல் பழகியவன் எதிராளி எவ்வாறு தாக்கினாலும் தடுத்து இவன் பழகிய குத்தை பயன்படுத்துவதற்கான சரியான நேரம் வரும்போது ஒரே குத்தில் எதிராளியை வீழ்த்திவிடுவான்.

இதே முறைதான் பங்குசந்தையில் தினசரி வர்த்தகத்திலும். நாம் 1000 Techniqueகளை கற்று கொள்வதை விட ஒரு Techniqueஐ சிறப்பாக கற்றுகொள்வது நல்லது. அப்பொழுதுதான் அதில் உள்ள அனைத்து விடயங்களும் தெளிவாக தெரிய வரும். நானும் அவ்வாறே வர்த்தகம் செய்துவருகின்றேன்.

அவ்வாறு பயிற்சி இல்லாதவர்களுக்காக எனது அனுபவத்தில் உள்ளவற்றை இங்கு எழுதுகின்றேன்.

எனது இந்த முயற்சி வெற்றி அடைய அனைத்து நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களை பணிவுடன் எதிர் நோக்குகின்றேன்.

வெள்ளி, 28 மார்ச், 2014

பங்குசந்தை எனும் புதையல்




பங்குசந்தையை பற்றி ஆரம்பிக்கும் முன் பிற முதலீட்டு வாய்ப்புகளையும் சிறிது பார்ப்போம்.

அரசாங்க கடன் பத்திரங்கள்
நிலம்
தங்கம்
Mutual Fund
பங்குசந்தை

அரசாங்க கடன் பத்திரங்கள்
குறிபிட்ட காலக் கெடுவிற்குள் முதிர்வடையும் வகையில் வெளியிடப்படும் பத்திரம். இதற்கான வட்டி விகிதம் நிலையானது. முதலிட்டிற்கான உத்திரவாதம் உண்டு.

நிலம்

முதலீடு செய்யும் போது சிறிது கவனமாக இருந்தால் போதுமானது. Fencing போன்ற பராமரிப்பு செலவுகள் உண்டு. ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் விற்று பணமாக்குவது கடினம்.

தங்கம்
பெண்கள் மிகவும் விரும்பும் முதலீடு. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏறிவந்தாலும் இதற்கான Demand குறையவில்லை. இதை வாங்குவதைவிட தற்போதைய காலக்கட்டத்தில் இதை பாதுகாப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.

Mutual Fund
எவ்வாறு முதலீடு செய்வது என்றே தெரியாதவர்களுக்கு இவை ஒரு வரபிரசாதம். இவற்றின் மதிப்பை NAV என்று குறிபிடுகிறார்கள். இவற்றில் நிலையான வருமானம் தரக்கூடியவை மற்றும் பங்குசந்தை தொடர்பான முதலீட்டு வாய்ப்புகளும் உள்ளன.

பங்குசந்தை
Last but not least என்பது போல தற்பொழுது பங்குசந்தையை பற்றி பார்ப்போம்.
பங்குசந்தை என்பது பங்குகள் வர்த்தகம் ஆகும் இடம்.
இதில் Primary Market, Secondary Market என்று உள்ளன.

Primary Marketஐ IPO என்றும் அழைப்பர். பொதுவாக கம்பெனிகள் தங்களது கம்பெனிகளின் விரிவாக்கத்திற்காக பணம் தேவைப்படும் பொழுது தங்களிடம் உள்ள பங்குகளில் ஒரு குறிபிட்ட சதவிதத்தை பொதுமக்களிடம் வெளியிட்டு பணம் திரட்டுவார்கள்.

Secondary Market என்பது IPOவில் வெளியிடப்படும் பங்குகள் அதற்கப்புறம் வியாபாரம் ஆகும் இடம் ஆகும்.
இதற்கான சந்தைகள் தற்பொழுது இரண்டு இயங்கி வருகின்றன. முன்பு பல சந்தைகள் இயங்கி வந்தன. ஆனால் தற்பொழுது கீழ்கண்ட சந்தைகள் மட்டும் பிரபலமாக இயங்கி வருகின்றன. அவை

i - BSE - Bombay Stock Exchange
ii - NSE - National Stock Exchange


இவைகளில் எதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் தொடரும்...

வியாழன், 27 மார்ச், 2014

இந்தியாவின் 5 நகரங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் 10 ரூபாய்.



புதுடெல்லி, மார்ச் 26-

காகிதத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் காலப்போக்கில்

மக்கிப் போவதாலும், எளிதில் கிழிந்து விடுவதாலும் உலகிலேயே
முதன்முதலாக பிளாஸ்டிக் டாலர்களை 1968-ம் ஆண்டு ஆஸ்திரேலியா
அறிமுகப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் பிளாஸ்டிக்
நாணய முறையை கடைபிடிக்க தொடங்கின. தற்போது, உலகின் 30-க்கும்
மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் நாணய முறை பயன்பாட்டில் உள்ளது.
காகித நோட்டுகளை விட அதிக காலம் நீடித்து உழைப்பதாலும், எளிதில்
கள்ள நோட்டாக இவற்றை வெளி நபர்கள் தயாரிக்க முடியாது என்பதாலும்,
மேலும் பல நாடுகள் பிளாஸ்டிக் நாணயங்களை தயாரிப்பதில் ஆர்வம்
காட்டி வருகின்றன.இதனையடுத்து, இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய்களை
அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்தது.
முன் முயற்சியாக 10 ரூபாய் முக மதிப்பில் பிளாஸ்டிக் நாணயங்களை
தயாரிக்க தீர்மானித்த ரிசர்வ் வங்கி, இவற்றை தயாரிப்பதற்காக சமீபத்தில்
‘டெண்டர்’ வெளியிட்டது.
இது வரை 8 பிரபல நிறுவனங்களிடமிருந்து ‘டெண்டர்’ வந்துள்ளன. விரைவில்

இவை பரிசீலிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில், குறைந்த செலவில்
தயாரிக்க முன்வரும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
பிளாஸ்டிக் ரூபாய்களை அச்சடிக்கும் தொழில்நுட்பத்தில் நமது நாடு இன்னும்

மேம்பாடு அடையவில்லை என்பதால் இந்த நாணயங்கள், வெளிநாடுகளில்
 உள்ள மிகுந்த பாதுகாப்புடன் கூடிய ரகசிய இடங்களில் தயாரிக்கப்படும்.
நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு பிளாஸ்டிக் ரூபாய்கள்
தாக்குப்பிடிக்கின்றனவா? என்பதையும் சோதித்து அறிய வேண்டியுள்ளது.
எனவே முதலில் பிளாஸ்டிக் 10 ரூபாய்களை தயாரிக்கவும், படிப்படியாக
நூறு ரூபாய் முக மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தவும்
ஆயத்தமாகி வரும் ரிசர்வ் வங்கி, புதிதாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள
நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய்களை கேரளாவின் கொச்சி,
கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒடிசாவின் புவனேஸ்வர்
மற்றும் இமாச்சலபிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்த
உள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, படிப்படியாக நாடு முழுவதும் பிளாஸ்டிக் ரூபாய்களை நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
[/size]