மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 மே, 2014

சென்னை பங்கு சந்தையின் சகாப்தம் முடிந்தது


70 ஆண்டுகால வரலாற்றை கொண்ட சென்னை பங்குச் சந்தை இன்றுடன் வணிகத்தை நிறுத்திக் கொள்ள உள்ளது.ஏற்கனவே, கோவை, பெங்களூர், மங்களூர், ஐதராபாத் மற்றும் கொச்சி ஆகிய பங்குச் சந்தைகள் மூடிப்பட்டுவிட்ட நிலையில் செபி-யின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத சென்னை பங்குச் சந்தையை குளோஸ் பண்ணும் உருவாகியுள்ளது.
Indian-Stock-Market-1
இந்தியாவில் உள்ள முக்கிய பங்குச்சந்தைகளில் சென்னை பங்குச்சந்தையும் ஒன்றாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான குறைகளை விரைந்து கையாண்டு முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் இது சிறந்து விளங்கி வருகிறது. தமிழக அரசின் டிட்கோ, சிம்சன், அமிர்தாஞ்சன், ரிலையன்ஸ் உள்பட 2,200 பட்டியலிட்ட நிறுவனங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இங்குள்ள 60 நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 2004-ம் ஆண்டு அது எடுக்கப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டுவருவது தொடர்பாக `செபி’ அமைப்பிடம் விண்ணப்பித்து இருந்த் நிலையில் செபி விதிமுறையின்படி, தற்போது ஆன்லைன் வர்த்தகம் கொண்டுவர வேண்டுமானால், 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்கு வர்த்தகம் நடந்திருக்க வேண்டும். அதோடு, 3 ஆண்டுகளில் பங்குச்சந்தையின் நிகர மதிப்பு ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.என்று அறிவித்து இருந்தது. அப்படி இல்லாத நிலையில் மண்டல பங்குச் சந்தை இயங்க முடியாது என்றும் செபி குறிப்பிட்டு இருந்தது. இந்த 30ம் தேதிக்குள் செபி-யின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலையில் சென்னை பங்குச் சந்தை தன் வர்த்தகத்தை குளோஸ் செய்து கொண்டது
About the Author

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக